வடிவேலுவுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபலங்கள்!
மக்களே இன்று வைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாள் என்று அனைவருக்கும் தெரிந்து இருப்பது போல் மேலும் சில பிரபலங்களுக்கு பிறந்தநாள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கௌதம் கார்த்திக்
முத்துராமனின் பேரன் கார்த்திக்கின் மகன் கௌதம் ராம் கார்த்திக் 12 செப்டம்பர் 1989 இல் சென்னையில் பிறந்துள்ளார். இவர் சைக்காலஜி ஆங்கிலம் மற்றும் ஊடகம் என மூன்று கலைப்பாடப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
சென்னையில் திறந்திருந்தாலும் ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடித்து பெங்களூரில் கல்லூரிப் படிப்பை முடித்தபின் மணிரத்னம் கடல் படத்திற்காக அனைவரும் தலையசைக்க இவரின் திரையுலக பயணம் துவங்கியது.
தந்தை கார்த்திக் அவரின் இயக்குனர் ஆசையை நிறைவேற்றும் தன் மகனை வைத்து 2006 இயக்க நினைத்தார். ஆனால் 2013ல் கடல் மூலமாகத்தான் திரையுலகில் அறிமுகமாகும் வேண்டும் என்று அவருக்கு முன்பே நிர்ணயித்திருக்கிறது போலிருக்கிறது.
அறிமுக நடிகராக வரவேற்கப்பட்டு படங்கள் நடிக்கத் துவங்கினார். முத்துராமலிங்கம் என்று தன் தாத்தா பெயர் கொண்ட படம் ஒன்று சிலம்பாட்டத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பார். துணை நடிகராக நெப்போலியனும் பல ஆண்டுகளுக்குப் பின் சூப்பரான வேடத்தில் நடித்தது திரை ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டது.
இவரின் திரைப்பயணத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து செமையான விமர்சனங்களைப் பெற்றது. நல்ல எதிர்காலம் மிக்க நடிகருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அமலா அக்கினேனி நாகார்ஜுனா:
12 செப்டம்பர் 1967 மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவில் பிறந்தவர் அமலா முகர்ஜி. பரத நாட்டிய பேரொளி மிருகங்கள் நல ஆர்வலராக திகழ்பவர். நாட்டியக் கலையை டி ராஜேந்திரனால் திரை உலகிற்கு அழைத்து வரப்பட்டார்.
1986 மைதிலி என்னைக் காதலி படத்தில் மூலமாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என எல்லா மொழி திரைபடங்களிலும் நடித்தவர். அமலா 1992ல் அக்கினேனி நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்ட அமலா முகர்ஜி அமலா அக்கினேனி ஆனார்.
பல காதலருக்கு இன்றும் பிரியமான பாடலாகச் சத்யா படத்தின் பாடல் அமைகிறது. ‘வலையோசை’ பாடலைப் பேருந்தில் பல ஜோடிகள் முனுமுனுத்து இருப்பர். எவர்கிரீன் கதாநாயகிகளால் இவரும் ஒருவர். 53வது பிறந்த நாளைக் கொண்டாடும் அமல அக்கினெனி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
க்ரிஷ்:
12 செப்டம்பர் 1977 திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர் விஜய் பாலகிருஷ்ணன். தன் தந்தையின் வேலை நிமித்தமாக நியூ யார்க்கிற்கு சென்றவர் அங்குள்ள திரையுலகில் நுழைந்தார். நடிப்புத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல கற்றல்கள் மேற்கொண்டுள்ளார்.
சென்னை திரும்பிய ஒரு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு மேடை நிகழ்ச்சியும் மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் தான் வாய்ப்புக்கள் கிடைத்தன. கணேஷ் குமாரால் கண்டறியப்பட்டவர். கணேஷ் இவரைப் பற்றி ஹாரிஸ் ஜெயராஜிடம் தெரிவிக்க இவருக்குத் திரையுலகில் வாய்ப்பு கிடைத்தது.
உலகநாயகன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில் பாடல் ஹரிஹரனும் கிருஷும் இணைந்து பாடிய பாடல். ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் க்ரிஷ். ஜூன் போனால் எப்பொழுதும் கேட்டாலும் புதிதாக இதயத்திற்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.
சிவபக்தரான இவர் நடிகை சங்கீதாவை திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் 2009ல் மணந்து 2012ல் இவர்களுக்குப் பிறந்த மகளுக்குச் சிவியா என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள். 43வது பிறந்தநாளை கொண்டாடும் க்ரிஷிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.