ஹாப்பி பர்த்டே மரண அடி கால்பந்து கடவுள் மெஸ்ஸி
மெஸ்ஸி அண்ணனுக்கு பிறந்தநாள் ஒரு வாழ்த்து போட்டு விடுங்க.ரோட்டு துணிக்கடைகளில் கால்பந்து கதாநாயகனின் பெயர் பொறித்த வெள்ளை நீலம் பட்டை தீட்டிய சட்டைக்கு தான் எவ்வளவு பவுசு! எண் 10 மற்றும் மெஸ்ஸி என்ற பெயர் குறித்த சட்டையை வாங்கி முத்தமிடாதே ரசிகர்களின் இதழும் உண்டோ!
லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி 24 ஜூன் 1987 அர்ஜென்டினாவில் பிறந்த இவர் இளம் வயதிலேயே கால்பந்தில் ஆர்வம் கொண்டு பிரமாதமாக விளையாடி வந்தார்.
அர்ஜென்டினாவிலிருந்து பார்சிலோனா
மெஸ்ஸிக்கு 11 வயதாகும்போது வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. சிறுவயதில் அவர் இருந்த கால்பந்து அணியினருக்கு இவரின் மேல் அக்கறை இருந்தாலும் போதுமான பண வசதி இல்லாததால் இவருக்கான சலவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இவர் விளையாடியதைப் பார்த்த பார்சிலோனா இவருடன் ஒப்பந்தம் போட்டது. மேலும், அவர் ஸ்பெயினுக்கு வரத் தயாராக இருந்தால் மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியது. பின்னர் இளைஞர் அணியை விட்டு 2000 ஆம் ஆண்டில் வெளியேறி இவரும் இவர் குடும்பத்தினரும் ஐரோப்பாவுக்கு சென்றனர், மெஸ்ஸி அந்த கிளப்பின் இளைஞர் அணிகளில் விளையாடத் தொடங்கினார்.
சாதனை நாயகனின் கோல் சாதனைகள்
பங்கு கொண்ட முதல் போட்டியிலேயே இவர் அடித்த கோலினால் பார்சிலோனா அணி வெற்றியை தழுவியது. அதனைத் தொடர்ந்து கோலின் நாயகனாக திகழ்ந்தார் மெஸ்ஸி.
கொரோனா
அர்ஜென்டினாவில் பிறந்த மெஸ்ஸி தன் நோயின் குறை தீர்த்த பார்சிலோனா விற்கு கால்பந்து நாயகனாக திகழ்ந்தவர் தற்போது பண உதவி செய்து கதாநாயகராக திகழ்கிறார்.
தற்போது உலகலவில் நிலவி வரும் கொரோனா தோற்று அச்சுறுத்தலால் நடுங்கிப் போய் இருக்கின்றனர். ஸ்பெயின் நாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் அவதிப்பட்டு 3300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு பார்சிலோனாவிற்கு விளையாடி வரும் மெஸ்ஸி ஸ்பெயினின் கோனார் மீட்புப்பணி இருக்கா ஸ்பெயினில் உள்ள பார்ஸிலோனா மருத்துவமனைக்கு ரூ.8.24 கோடி (10 லட்சம் யூரோ) நிதியுதவி வழங்கியுள்ளார்.
எல்லா நாட்டு இளைஞர்களுக்கும் கால்பந்து நாட்டம் வந்து கோல் அடிக்கும் கதாநாயகனாகத் திகழும் மெஸ்ஸிக்கு ஹாப்பி பர்த்டே.