தமிழ் திரையுலகின் முகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம்!
அவரைக் கண்டு பூரிக்காத மனிதர்களும் உண்டோ! நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வார்த்தையால் புகழ்ந்து விட முடியுமா!

சிவாஜி கணேசன்
விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்னும் சிவாஜி கணேசன் 1 அக்டோபர் 1928 விழுப்புரத்தில் பிறந்துள்ளார். வி சி கனேசன் சிவாஜி கணேசனாக திரையுலகில் மாறினார்.
மேடை நாடகம்
பத்து வயதில் திருச்சிராப்பள்ளிக்கு பயணம் மேற்கொண்ட இவர் மேடை நாடகங்களில் தன் பயணத்தை தொடங்கினார். பரதநாட்டியம் கதக் மணிப்புரி நடனங்களை பயின்றார்.

திரையுலகம்
1940 மற்றும் 1950 திரையுலகில் பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்கள். தெலுங்கு நடிகர்களுக்கு நடிப்பும் வசனமும் ஒத்துப் போகாமல் இருக்க சிவாஜி கணேசன் அவர்கள் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக திரையுலகில் பயணத்தைத் தொடங்கினார்.
பராசக்தி
1952ல் பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நின்று வீரவசனம் பேசிய முதல் நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’
வில்லன்
1954 அந்த நாள் படத்தில் வில்லனாக பட்டையைக் கிளப்பினார். அதே வருடத்தில் தன் போட்டியாளரான எம்ஜிஆருக்கு வில்லனாக கூண்டுக்கிளி படத்தில் அமர்க்களப் படுத்தினார்.
மேலும் படிக்க : நடிகருக்கு கோவில் கட்டிய தெலங்கானா கிராம மக்கள்
சரித்திரப் படங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மனை திரைக்குக் கொண்டு வந்த நடிகர் நடிகர் திலகம்.
என் குலப்பெண்களுக்கும் மஞ்சள் அரைத்து தந்தாயா!
வீர வசனம் பேசி அனைவரினுள்ளும் வீரத்தை எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் நடிகர் சிவாஜி கணேசன்.
திருவிளையாடல் திருவருட்செல்வர் சரஸ்வதி சபதம் திருமால் பெருமை தில்லானா மோகனாம்பாள் கர்ணன் திருப்பூர் குமரன் பகத்சிங் என இறைவன் முதல் ஆண்டி வரை அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முகவரி கொடுத்த மாபெரும் நடிகர்.

சாதனை
இவர் நடித்த அனைத்து படமுமே சரித்திரம் பேசும். கர்ணன் பரதன் நாரதர் அப்பர் நாயன்மார்கள் என அனைவருக்கும் முகம் கொடுத்த நடிகர். 1952-1999 47 வருடங்கள் திரையுலகில் பயணம் செய்த மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன். 21 ஜூலை 2001 இயற்கை எய்தினார்.
விருதுகள்
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என அனைத்து மொழி திரையுலகில் சுழன்று வந்த சூறாவளி. வெளிநாட்டு சிறந்த நடிகராக புகழ் பெற்ற முதல் இந்தியர்.பல விருதுகளின் சொந்தக்காரரான இவருக்கு திரையுலகம் செய்தது என்ன தெரியுமா! செவாலியர் சிவாஜி கணேசன் விருது இவரின் நினைவாக சிறந்த நடிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தந்து சிறப்பித்து வருகிறது திரையுலகம்.

92-வது பிறந்தநாளை இன்று நடிகர் திலகத்திற்கு மக்களின் சார்பாக சிலேட்குச்சியின் தலை வணக்கத்துடன் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க : எளிமையான போட்டோ ஷூட்டில் மக்களைக் கவர்ந்த அனுபமா