கில்லியான ராஜமாதா வில்லியான நீலாம்பரியின் பிறந்தநாள்
தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் தெலுங்கு ஸ்டார் பிரபாஸுடனும் எவ்வளவு காலம் சென்றாலும் அழியாத கதாப்பாத்திரங்களை நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல
ரம்யா கிருஷ்ணன்
15 செப்டம்பர் 1970ல் மதராசப் பட்டினத்தில் பிறந்திருக்கிறார். படையப்பா படத்தின் வசனத்தை போல் இவர் அன்றும் இன்றும் என்றும் இளமையாகவே காட்சி அளிக்கிறார்.

இவர் யார் என்று தெரியுமா! முன்னணி நடிகரான சோ ராமசாமியின் மருமகள். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலை கற்று மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத் தொடங்கினார்.
1984ல் தன்னுடைய 14வது வயதில் வெள்ளை மனசு படத்தில் ஒய். ஜி. மகேந்திரனுடன் இணைந்து நடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு வருடத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படங்கள் பெரிதாக வரவேற்கப் படவில்லை மேலும் இவரும் பெரிதாக தெரியவில்லை.

பிரதான நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களின் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார் ரம்யா கிருஷ்ணன்.
1989ல் சுற்றதருலு என்ற படத்தின் மூலம் திரைப் பயணத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. தொடர்ச்சியாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக பயணத்தை தொடர்ந்தவர் 1999ல் படையப்பா படத்தின் மூலம் வில்லியாக மாஸாக தமிழ் திரை உலகிற்கு திரும்பினார். 21 வருடங்களாயினும் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் பெரும் அளவில் பேசப்படுகிறது.

2015 எஸ். எஸ். ராஜமௌலியின் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக கட்டளையிட்டுக் கொண்டு என் கட்டளையே சாசனம் என்று கம்பீரமாகக் கர்ஜித்தார். 2019 குயின் என்ற வெப் சீரிஸில் அரசியல்வாதியாக பட்டையைக் கிளப்பினார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து திரை உலகிலும் சூப்பராக வலம் வருபவர். திரையுலகத்தில் பிரதான நடிகர்கள் மத்தியில் தன்னுடைய 14 வயது முதல் 50 வயது வரை தனக்கென்று இடம் பிடித்து நடித்து வருபவர். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பும் ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.