நண்பன் காதலுக்கு துணை போகும் சசிக்கு இன்று பிறந்தநாள்
இயக்குனர் சசிகுமாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சசிகுமாரை நடிகராக இயக்குனராக எல்லாருக்கும் தெரியும் ஆனால் இவரோட திரை பயணம் எந்த படத்தில் இருந்து ஆரம்பித்தது என்பதை முதலில் இருந்து பார்ப்போமா!
சசிகுமார்
28 செப்டம்பர் 1974 இல் மதுரையில் பிறந்து இருக்கிறார் மகாலிங்கம் சசிகுமார். என்னது சேது படத்தில இயக்குனர் பாலாக்கு துணை இயக்குனராக இருந்தவர் சசிகுமாரா! என்ன ஒரு ஆச்சரியம்!

பாலாவின் துணை இயக்குனர்
சியான் விக்ரமின் மாறுபட்ட திரைப் பயணம் துவங்கியது இயக்குனர் பாலாவின் சேது படத்திலிருந்து என்று கூறினால் மிகையாகாது. சசிகுமாரின் இருபதாவது வயதில் தன்னுடைய உறவினரான கந்தசாமி சேது படத்தை தயாரிக்க சசிகுமாரின் திரையுலக பயணம் தொடங்கியது.
இயக்குனர் அமீருடனுமா!
சேது படத்தில் இயக்குனர் பாலாவிற்கு துணை இயக்குனராக எம். சசிகுமார் மட்டும் பணி செய்ய வில்லையாம் இயக்குனர் அமீர் அப்போதைய துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மௌனம் பேசியதே ராம் என்னும் படம் மூலம் இயக்குனராக மாறிய அமீரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார். இயக்குனர் அமீரின் மூன்றாவது படமான பருத்திவீரன் படத்தின் பொழுது தாமும் இயக்குனராக பணியைத் துவங்கினார்.

இயக்குனரான சசிகுமார்
2008ல் சுப்பிரமணியபுரம் என்னும் காதல் கிராமம் நட்பு விரோதம் அனைத்து விதமான உணர்ச்சிகளின் கலவையாக மண் மணம் வீச புதுமையான இயக்குனராக அறிமுகமானார். வைப்பவ் அபிநயா இணைந்த ஈசன் படம் இவர் இயக்கத்தில் பெண்ணிற்கு நடக்கும் அநீதியும் அக்கா தம்பி பாசமும் அனுபவப்பூர்வமாக திரையில் காணலாம்.
மேலும் படிக்க : தர்மதுரை படம் எந்தப் பக்கம் போனாலும்…

நடிகர்
சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் நடிப்பு பயணத்தையும் அந்தப் படத்தின் மூலமே துவங்கி அதனைத் தொடர்ந்து நாடோடிகள் சுந்தரபாண்டியன் போராளி அப்பா வெற்றிவேல் தாரை தப்பட்டை கிடாரி என பல படங்களில் கதாநாயகனாக பட்டையைக் கிளப்பினார். பேட்டை படத்தில் தலைவர் ரஜினியின் நண்பனாக, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷின் அண்ணாவாக சசிகுமார் பல துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

முந்தானை முடிச்சு
தற்போது திரையுலகின் செமையான அப்டேட் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக். பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் எம் சசிகுமார் கதாநாயகராக நடிக்க உள்ளார். நடிகராக திரையுலகை தன் புதிய விதமான ஸ்டைலில் கலக்கி வருகிறார் எம் சசிகுமார்.
திரையுலகின் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என பன்முக வித்தகராக இருக்கும் எம் சசிகுமார் இன்று 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மக்களின் சார்பாக சிலேட்குச்சி அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
மேலும் படிக்க : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்க…. சுந்தர பாண்டியன் படம்