TOP VIDEOS

சாக்லேட்பாயாக பாய்ஸில் வந்த காதல் நாயகன் பரத்துக்கு வாழ்த்துக்கள்!

#பரத் #Bharath

காதல் நாயகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். காதல் நாயகன் என சொன்ன உடனே பல பேரோட முகம் உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். ஆனால் இன்னிக்கி பிறந்த நாள் யாருக்குன்னு பார்த்தீங்கன்னா காதல் படத்தில் நடித்த நாயகன் பரத்.

21 ஜூலை 1983 நம்ம மாநிலமான திருச்சியில் பிறந்து இருக்காரு பரத் நிவாஸ். நம்ம தமிழ் பையனுக்கு பட வாய்ப்பு இல்லைனா எப்படி! ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில தன்னோட முதல் அடியே திரையுலகத்தில் வச்ச இவருக்கு அதுக்கப்புறம் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. 2003 ல வந்த படம் பாய்ஸ் இன்றைய தேதியில பதினேழு வருஷம் ஆனாலும் அந்த படத்தோட பவுசு குறையாமல் பார்க்கும் கூட்டம் பல இருக்கின்றது.

அப்படியே மலையாளத் திரையுலகிலும் ஒரு ரவுண்டு வந்தார். அதன்பிறகு செல்லமே படத்தில காலேஜ் படிக்கும் வாலிபன் வயதில் இருக்கும் இவருக்கு வில்லன் கெட்டப்பும் செமையா செட்டாச்சு. ஒரே வருடத்தில் இவ்வளவு பயணங்கள் முடித்து பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்துல கதாநாயகனா வந்தவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அவரோட திரையுலகப் பயணத்துல காதல் படம் தான் பெரிய திருப்புமுனையாக திகழ்ந்தது. காதல் படத்தில் கடைசி சீன் கிளைமாக்ஸில் வரும் யஞ்யஞ்யஞ்யஞ்…. என்னும் ஹம்மிங் நமது ரியல் வாழ்க்கையில் பலபேரால் பல இடங்களில் சுட்டிக்காட்டப்படும் ஒரு காட்சியாக இருக்கின்றது.

அருமையாக படம் நடித்து வந்தவருக்கு நடுவுல கொஞ்சம் மார்க்கெட் போயிருந்தாலும் பரத் நடிப்பில சூப்பரான ஒரு படம் ரசிகர்களுக்கு தயாராகுகிறது‌.

நடுவன்

அதிரடி நாடக படமாக வெளிவரப்போகிறது பரத் நடிக்கும் நடுவன். பரத் மற்றும் அபர்ணா வினோத் இணைந்து நடிக்கும் நடுவன் படம் ஷரன் குமார் இயக்க தரன் இசையமைத்து உள்ளார்.

ஜூலை மாதம் 10 ஆம் தேதி பிரபலமான இயக்குனரான வெங்கட்பிரபு நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் டிரைலரை இணையதளங்களில் வெளியிட்டார். மர்மமாக தொடங்கும் இந்தப் படத்தின் டிரைலர் கடைசியாக பரத் வார்த்தைகளோடு முடிகின்றன. கொலையாளியா இவர்? என்ற கேள்வியுடன் ட்ரெய்லர் முடிகிறது.

மக்களே இதோ நடவன் படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர். அப்படியே பரத்துக்கு ஒரு விஷ் போட்டுருங்க மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *