அசுர(ன்) நாயகிக்கு இன்று பிறந்த நாள்
மஞ்சு வாரியருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இவங்க பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா மக்களே! அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியா நடிச்சவங்க மஞ்சு வாரியர்.
மஞ்சு வாரியர்
10 செப்டம்பர் 1978 நாகர்கோயில் தமிழ்நாட்டில் பிறந்து இருக்காங்க மஞ்சு வாரியர். இவரின் தந்தை நாகர்கோயிலில் பணியில் இருக்க இவர் பிறக்க பின் கேரளத்து கண்ணூரில் வளர்ந்தார். இவர் பிறந்த சிறிது காலத்திற்குப்பின் தந்தைக்கு வேலை நிமித்தமாக இடம் மாற்றம் ஏற்பட்டது.
மஞ்சு வாரியர் நாட்டியக் கலையில் திறமைசாலி. குறிப்பாக குச்சுப்புடியில் கைதேர்ந்தவர். 1995 தன்னுடைய பதினேழாவது வயதில் சாக்ஷயம் என்னும் மலையாளப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மூன்றே வருடங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சாதனைக்கு உறியவர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு துணை கதாநாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மோகன்லால் பிரித்திவிராஜ் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த லூசிபர் என்ற படம் பல மொழிகளில் அமேசான் பிரைமில் வந்ததை பலர் பார்த்திருக்கலாம். மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள படமாக இருந்தாலும் அனைத்து மக்களிடையே அருமையான வரவேற்பைப் பெற்றது.
இவருடைய தமிழ் அறிமுகத்தை பற்றி சொல்லவா வேண்டும்! வெற்றிமாறன் தனுஷ் ஜி. வி. பிரகாஷ் இந்த மூவரின் கை இணைப்பு எப்பொழுதுமே சூப்பரான வெற்றியை தழுவும். அப்படிப்பட்ட படத்தில் நடிகையாக மஞ்சு வாரியர் அறிமுகமானார்.
அசுரன்
தனுஷின் மனைவியாக பச்சையம்மாள் என்னும் கதாபாத்திரத்தில் மஞ்சுவாரியர் நடித்து இருந்தார். அசுரன் படம் பல வரவேற்பை பெற்றதோடு இவரின் அறிமுகமும் படு தூளாக அமைந்தது.
நடிகர் மட்டுமல்ல
மஞ்சு வாரியர் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் இருக்கிறார். பிரமாதமான கிளாசிக்கல் நடனக் கலைஞர்.
மஞ்சு வாரியருக்கு மக்களின் சார்பாக சிலேட்குச்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.