சினிமா

கமனத்துடன் அழகிய தமிழ் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஸ்ரேயா சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஸ்ரேயா சரண் நடித்த வெளி வர இருக்கும் படம் கமனம். இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.

ஸ்ரேயா சரண்

11 செப்டம்பர் 1982 உத்தராகண்ட்டில் பிறந்துள்ளார். இவர் கதக் மற்றும் ராஜஸ்தானி நாட்டியக்கலை பயின்று அருமையான நாட்டிய பேரொளியாக திகழ்கிறார். இவருக்கு நாட்டியக் கலையை கற்பித்த ஆசிரியரே இவர் திரையுலகிற்கு வர காரணமானவர். நாட்டிய காணொளியில் நடனமாட தொடங்கிய இவருக்கு திரைப் பட வாய்ப்புகள் குவிந்தன.

2001 இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு இந்தி தமிழ் கன்னடா மலையாளம் என பல மொழி திரையுலகில் வலம் வந்தவருக்கு ஹாலிவுட் என்று சொல்லப்படும் வெளிநாட்டு திரையுலகிலும் படவாய்ப்புகள் வந்தது.

பிரதானமாக தெலுங்கு திரை உலகில் பயணித்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, யங்க் ரெபெல் ஸ்டர் பிரபாஸ், அக்கினேனி நாகார்ஜுனா என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரேயா சரண்.

தமிழ் திரையுலகிலும் மாமனார் மருமகன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் தனுசுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இளைய தளபதி விஜய் விஷால் சிம்பு ஆர்யா ஜீவா ஜெயம் ரவி என பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த கதாநாயகி ஸ்ரேயா சரண். கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா சரண்.

கமனம்

இன்று இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் விதமாக கவனம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் இவர் முற்றிலும் மாறுபட்ட வகையில் சாதாரண மிடில்க்ளாஸ் பெண்ணாக காட்சி அளிக்கிறார். இப்படத்தை எழுதி இயக்கியவர் சுஜனா ராவ். ரமேஷ் கஸ்தூரி, வெங்கி புஷதபு, ஞான சேகர் வி.எஸ் ஆகியோர் இப்படத்தை தயாரித்து இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளி வரப்போகிறது. 2017 பிறகு இந்த படம் தமிழ் திரையுலகில் ஸ்ரேயா சரணுக்கு பெரிய ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயா சரண் தவிர்த்து படத்தின் நடிகர்கள் பட்டியல் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன கூடிய விரைவில் பிரம்மாண்டமாக படம் வெளிவர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *