சினிமா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கர் சார்!

பிரம்மாண்டத்தின் அடைமொழி இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்குனர் சங்கர் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்திலிருந்து இன்றுவரை இவர் தொட்டதெல்லாம் பட்டையைக் கிளப்பி பட்டிதொட்டியெல்லாம் மாஸ் காட்டியது. இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் 57 வது பிறந்தநாளை சங்கர் என்று கொண்டாடுகின்றார்.

சங்கரின் முதல் படமான ஜெண்டில்மேன் படத்தில் முதல் ஆண்டி ஹீரோ கதையைக் கொண்டு எடுக்கப்பட்ட ஜெண்டில் மேல் வேற லெவலில் ஹிட் அடித்தது. அர்ஜூனுடன் இணைந்து அவர் அடுத்து முதல்வன் படம் மாஸாக அமைந்து பின்னிப் பெடலெடுத்து இருப்பார்.

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான், ஷங்கர் தன்னுடைய முதல் படமான ஜென்டில்மேன் 1993 ஆம் ஆண்டு வெளியானது. சங்கரின் படம் புதுமை மற்றும் ஆழ்ந்த கருத்துக்கள் பிரம்மாண்டமான செட்டுகள் வணிக உத்திகள் ஆகிய அனைத்தும் ஆராய்வதில் கில்லியாக இருப்பார்.

ஷங்கர் திரையுலகிற்கு வந்து 27 வருடங்கள் ஆகின்றது இந்த 27 வருடங்களில் சங்கர் மொத்தம் இயக்கிய படங்கள் 13 தான் ஒவ்வொரு கதைக்கும் ஒரு இடைவெளி இருக்கும் இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் மெனக்கெடல் என்பது அதிகமாக இருக்கும். உலக அரங்கில் தனித்துவமான இயக்குனராகச் சங்கர் அவர்கள் படங்கள் அமைந்தது. அவரின் சிந்தனை மற்றும் அவர் உருவாக்கும் கதைகள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறைசார்ந்த ஆழமாகச் செல்லும் சங்கர் அவர்களின் திரைப்படங்களுக்கென்று மாசல ரசிகர்கள் இருக்கின்றனர்.

தன்னுடைய படத்திற்கு தனி அடையாளங்கள் பலசங்கரன் படத்தின் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சங்கர் இந்தியாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கின்றார். இவருடைய படங்கள் அனைத்தும் வசூல் வேட்டை செய்பவையாக இருந்திருக்கின்றந. திரு சங்கர் அவர்களின் படங்கள் ஒவ்வொன்றும் சமூகத்தின் பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதைகளாக இருந்திருக்கின்றன.

சங்கர் நாம் செலவு செய்து பார்க்க முடியாத இயற்கை காட்சிகள் எல்லாம் நாம் கொடுக்கும் 150 ரூபாய் டிக்கெட் விலையில் காமித்திருப்பார். எந்திரனில் டெக்னாலஜி உச்சத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து காட்டியிருப்பார்.

அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஆழமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருக்கின்றன. சங்கர் என்றாலே மாசான பிரம்மாண்டமான இருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். மீண்டும் ஒரு முறை பிரம்மாண்ட இயக்குனருக்குப் பிரம்மாண்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *