சினிமா

ஹாப்பி பர்த்டே ஷாலினி (பிரித்தி)

அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டேவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஷாலினி விரைவில் வெளியாக காத்திருக்கும் பிரம்மாண்டமான படங்களைப் பார்க்கலாம். மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடும் ஷாலினி பாண்டே.

ஷாலினி பாண்டே:

23 செப்டம்பர் 1994 பிறந்த ஷாலினி பாண்டே 2017 திரையுலக பயணத்தை துவங்கினார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ஷாலினி பாண்டேவின் மேடை நடிப்பை பார்த்து இவரின் படத்திற்கு கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார். அதுவே விஜய் தேவரகொண்டாவுடன் அர்ஜுன் ரெட்டி திரைப்படமாக வெள்ளித்திரையில் வெளிவந்து இவரும் திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து பயணித்தவர் 100% காதல் எனும் தமிழ் திரைப்படத்தில் 2019 ஜி. வி. பிரகாஷுடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்.

திரை உலகத்திற்கு வந்து மூன்று வருடங்கள் என்றாலும் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்குகிறார் ஷாலினி பாண்டே. 2020 வருடம் இவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிகரமான வருடமாக அமையவிருக்கிறது.

நிஷப்தம்/சைலன்ஸ் என்னும் இரு மொழி படம் வரும் 2 அக்டோபர் 2020 ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்த திரில்லர் படம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தில் சோனாலி/சாக்ஷி முக்கியமான கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இவரின் குரலே நடித்திருக்கிறது.

2020 தொடக்கத்தில் ஜி5யில் பம்ஃபாத் என்னும் படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் அறிமுகமானார். அடுத்ததாக ரன்வீர் சிங்குடன் ஜெயேஷ்பாய் ஜோர்டார் என்னும் படமும் வெளிவர காத்திருக்கிறது. நகைச்சுவை நாடக படமான இது திரையரங்குகளின் தரப்பில் காத்திருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தெலுங்கு தமிழ் ஹிந்தி என மூன்று திரையுலகிலும் பெரிய படம் வெளியாக காத்திருக்க 2020 வெற்றி வருடமாக அமைய ஷாலினி பாண்டேவிற்கு வாழ்த்துக் கூறுவதோடு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *