சினிமா

இந்தியன் புரூஸ் லீயின் பிறந்தநாள்

பொல்லாதவன் சுல்லான் என பல படங்கள்ல சட்டைய கிச்சுட்டு அடிதடி காட்சிகளில் தற்காப்புக் கலையோட நடிக்கும் தனுஷ்-யை ‘இந்தியன் புரூஸ் லீ’னு செல்லமா கூப்பிடறாங்க. அவருக்கு 38 வயசு ஆகுதாம்ல. மாமனார் மாதிரியே இன்னும் அந்த ஸ்டைலு கெத்துனு எப்படி திரையுலகத்துக்கு வந்தாரோ அப்படியே இருக்காரு.

28 ஜூலை 1982 தேனில பிறந்த இவருக்கு வெங்கடேஷ் பிரபுனு பெயர் வச்சாங்களாம் திரை உலகத்துக்காக தனுஷ்னு பெயர் மாத்திருக்காரு. தன்னுடைய அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய படமான துள்ளுவதோ இளமை படத்தில 20 வயசுல திரையுலகத்தில களமிறங்கினாரு தனுஷ். அதைத்தொடர்ந்து தன்னோட தமையன் செல்வராகவன் படத்தில மூள சரியில்லாதவரா நடிச்சு அடுத்த வருடமே ரிலீஸான படம் தாங்க காதல் கொண்டேன்.

2002-2020 18 வருஷமா நடிகரா தயாரிப்பாளரா இயக்குனரா பாடகரா திரைக்கதை எழுத்தாளரா கவிஞரா என எல்லாமாகவும் தன்னோட திரையுலக பயணத்தை அமைச்சிருக்காரு தனுஷ். 2012 வருடம் இவருக்கு வெற்றிகரமா இருந்தது. “வொய் திஸ் கொலாவெரி டி” பாடல் உலகம் முழுக்க இவரை தெரிய வைச்சுது. அதுவே இவரோட லைஃப்போட திருப்புமுனையாக அமைச்சுது.

தமிழ் திரையுலகத்தில மட்டுமே வலம் வந்துட்டு இருந்த இவருக்கு உலகம் ஃபுல்லா ரவுண்ட் அடிக்க வாய்ப்பு கிடைச்சது. 2013 மலையாள படமொன்றிலையும் ஹிந்தி திரையுலகத்திலையும் களமிறங்கினாரு. பாலிவுட்ல ரஞ்சனா படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து இவருக்கு பல விருதுகள் கிடைச்சிச்சு.

ஹாலிவுட்ளையும் ஒரு கலக்கு கலக்கி வந்துட்டாருனா பாத்துக்கோங்களேன். ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படம் ஒரு பிரெஞ்சு நாவலிருந்து படமாக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரி படம் தமிழ் தெலுங்குனு இரண்டு மொழிளையும் வெளியாயிருக்கு.

இப்படி பல மொழிகளிலும் நடிச்சுட்டு தமிழ் திரை உலகத்தில் எல்லா பணியையும் ப. பாண்டி படத்து மூலமா செய்ய தொடங்கினாரு. இந்தப் படத்தோட கதையை எழுதி இயக்கி நடித்திருக்கிறாரு தனுஷ்.

தமிழ் திரையுலகத்தில நடிச்ச கிட்டத்தட்ட எல்லா படத்துக்கும் ஏதாவது ஒரு விருதாச்சும் தட்டிப் பறிக்கிற மாதிரி தன்னோட திரையுலக பயணத்தை மிகவும் வெற்றிகரமாக பயணச்சிருக்காரு தனுஷ்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமான ஜகமே தந்திரம் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கு. தனுஷோட ரசிகர்கள் எல்லாம் திரையரங்குகள் திறந்து இந்த படம் ரிலீஸாக காத்திருக்காங்க.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க முதல் சிங்கிள் ‘ரகிட்ட ரகிட்ட’ பாடல் இவரோட பர்த்டே ஸ்பெஷலா இன்றைக்கு ரிலீஸ் செஞ்சிருக்காங்க. யூடியூப்ல #1 ட்ரெரிண்டிங்ல இருக்கும் அந்த பாடலைப் பார்த்து மகிழ்ந்து அப்படியே அவருக்கு ஒரு பிறந்தநாள் நல் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *