திரையுலகத்தை ஆட்சி செய்த ஆச்சி
நம் வாழ்வில் நாம் கடந்த 70, 80, 90, 20ஸ்கள் கிட்ஸ்கள் அனைவரும் அறிந்த சகலகலா வல்லி நாடக நடிகை திரையுலகின் ஜில் ஜில் ரமாமணி அம்மா அவர்களை நினைத்து பதிவை இடுவதில் சிலேட்குச்சி பெருமை அடைகின்றது. நானும் அதில் ஒரு பங்கு என்பதில் சிறப்பாக இருக்கின்றது. தமிழகத்தில் பிறந்து இந்திய சினிமா உலகிற்கு நடிப்பு கலையை நீண்ட காலம் கொண்டு சென்ற சிறந்த பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். வாங்க சினிமா உலகின் பெண் ஆட்சி தர்பாரை அறிவோம்.
“கம்முனு கட”
“கம் னா கம் கம்மனாட்டி கோ”
“ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு”
காலம் கடந்தும் இதுபோன்ற வாக்கியங்கள் மறவாமல் இன்றும் திரை உலகில் ஆட்சிபுரியவதற்கான முக்கிய காரணம் அதை வெள்ளித்திரையில் மிகவும் அழகாக குடுத்த நம் ஆச்சிக்கே அந்த பெருமை சேரட்டும்.
பிறப்பு மற்றும் கலை உலக பயணத்தின் ஆரம்பம்:
மன்னார்குடியில் 26 மே 1937 கோபிசாந்தாவாக பிறந்து பின் மனோரமாவை திரையுலகில் வலம் வந்தவர் எல்லோருக்கும் ஆச்சியாகவே திகழ்ந்தார். தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்னும் ஊரில் தன் தாயுடன் வாழ்க்கையில் 11 வயதிலேயே பள்ளிப்படிப்பை விட்டு வீட்டு வேலை செய்ய தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்பொழுது அந்த ஊருக்கு வந்த நாடகக்குழுவின் சின்ன கதாபாத்திரம் செய்யும் நபருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அக்குழுவினர் ஆவர்களை நாட அங்கு தொடங்கியது ஆச்சியின் கலைப்பயணம்.
ஐந்து முதல் அமைச்சர்களுடன் நடிப்பு:
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்கள் நால்வருடனும் மற்றும் ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த என்.டி.ஆர். அவர்களுடனும் ஆச்சி இணைந்து நடித்துள்ளார்.
சாதனை:
5000 மேடை நாடகங்கள் மற்றும் 1500 திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரை உலகத்தையே கலக்கியுள்ளார். இந்தத் திரையுலக பயணம் அவர்களுக்கு பல விருதுகளை வாங்கி குவித்தது அதில் குறிப்பாக பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி விருதுகள். அவரின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் வெளியிடப்பட்டது.
மறைந்துபோன காவியம் மனோராமா ஆட்சி:
10 அக்டோபர் 2015 இவர்களின் மறைவால் மாபெரும் நகைச்சுவை மற்றும் பல கதாபாத்திரங்களின் சூத்திர நாயகியை திரையுலகம் இழந்துவிட்டது. மாண்புமிகு அம்மா, ஆச்சியின் மறைவிற்கு வந்து “என்னை அன்பாக ‘அம்மு’ என்று அழைத்தவரை நான் இழந்து விட்டேன்” என வருந்தியுள்ளார்.
மறக்க முடியாதவை:
ராஜராஜ சோழனின் சோழநாட்டின் ஒற்றப்படையில் ஒற்று சேகரிக்கும் கதாப்பாத்திரத்தில் கம்பீரத்துடன் அருமையாக அசத்தியிருப்பார்.
தில்லானா மோகனாம்பாவில் அவர்களது கலைப்பயணம்.
சின்ன கவுண்டர் படத்தில் ஆட்சி என் சிரிப்பை இன்றளவும் நினைத்து சிரிக்கலாம். ஆத்தா குழந்தை புள்ள பாவம் ஆத்தா மந்திரிச்சு விடனும் வாயமூடு கொஞ்சம் எனும் டயலாக் அனைவரையும் சிரிச்சு குழுங்கச் செய்யும்.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மாவாக அனைவரையும் விலாசி வாங்கியுள்ளார்.
இந்த உலகத்தை விட்டு நீங்கள் மறைந்திருந்தாலும் எங்கள் உள்ளத்தை விட்டு அல்ல… இன்னிக்கு அவங்களுக்கு ஹாப்பி பர்த்டே ஒரு விஷ் போட்டுருங்க…