கல்வி , செல்வம், வீரம் வாழ்வில் கிடைக்க, ஒரே ஒரு பாடல்
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
என்ற திருவள்ளுவரின் குரலுக்கு இணங்க ஒருவருக்கு கல்வி என்பது இன்றியமையாத ஒன்று படிப்பு இருந்தால் இவ்வுலகையே வென்று விடலாம்.நாம் கற்கும் அறிவு என்பது நமக்கு மட்டுமல்ல நம்மை சார்ந்து இருக்கும் அது உதவியாக உள்ளது இந்த சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஒருவரின் கல்வி இன்றியமையாத ஒன்று….
ஒருவருக்கு உதவி என்றால் பறந்தோடி உதவி புரிவார் அனுமார் என்பர்.. கீழே கொடுக்கப்படும் பாடல்வரிகளை அனுமனை நினைத்து மனதார பாடினால் கல்வி செல்வம் வீரம் ஆகியவை அனைத்தும் நம்மிடம் நிறைந்து காணப்பட அனுமர் உதவுவார்.
பாடல் வரிகள்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
பாடலின் பொருள்
வாயுவுக்கு பிறந்தவன் அனுமன் ஆகாயத்தில் பறந்து கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமி தேவியின் மகளான சீதையைக் கண்டான் அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான் அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.
பொருள் விளக்கம்
பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தார் அனுமன். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான்.ஜனகர் தங்க கலப்பையால்யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான் ஆக பஞ்சபூதங்களையும் அடக்கியவர் அனுமன் அவரை வழிபட்டால் பூதங்கள் நமக்கு நன்மையே செய்யும்.
அனுமனை அனுதினமும் நினைத்து இப்பாடல் வரிகளை மனமுருகிப் பாடி வர அனுமன் நமக்கு அனைத்து நன்மைகளையும் செய்து நமக்கு உறுதுணையாக பாதுகாவலராக இருப்பார்.