ஆன்மிகம்ஆலோசனை

அஞ்சனை மைந்தன் அனுமன் ஜெயந்தி

திதியில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை திதி. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழக்கூடிய நட்சத்திரம் மூல நட்சத்திரம். இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்நாள் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் அவதரித்த நாள். மாதங்களில் சிறப்பு பெற்ற மார்கழியில் வருகிறது அனுமன் ஜெயந்தி.

ஜனவரி 12-ஆம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் கோவில்கள் தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா என்பதால் பக்தர்களுக்கு அனுமதி குறைவாக இருக்கும். இதனால் வீட்டிலேயே அனுமன் ஜெயந்தி விரதம் இருந்து கொண்டாடலாம். அனுமன் ஜெயந்தி அனுமன் பிறந்த தினம் என்பதால் இன்றைய தினம் விரதம் இருப்பார்கள்.

அதிகாலை குளித்து விட்டு நாள் முழுவதும் ராம நாமத்தை உச்சரிக்க வேண்டும். உபவாசம் இருக்க வேண்டும். வீட்டில் அருகில் ராமர் அல்லது அனுமன் கோவில் இருந்தால் துளசி மாலை சாத்தி, வெற்றிலை மாலை இரட்டை படை எண்ணிக்கையில் சாத்தி, வெண்ணை காப்பு வைத்து வழிபடலாம். ஸ்ரீராம ஜெயத்தை எழுத விரும்புபவர்கள் இன்றைய நாள் துவங்கி தொடர்ந்து எழுதி வரலாம்.

வெண்ணை, பழங்கள், பொரிகடலை, தங்களால் இயன்ற நைவேத்தியத்தை படைத்து வழிபாடு செய்யலாம். துளசி தீர்த்தம் மட்டும் உபவாசம் இருப்பவர்கள் பருகலாம். காலை ஒருவேளை விரதமிருந்து மதிய வேளை உணவு உண்பார்கள். மாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட சனி தோஷம் நீங்கி, துன்பங்கள், கஷ்டங்கள் தீரும். பீடைகள் அகலும்.

மாலை வேளையில் வீட்டில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம், ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள் சொல்லி வழிபடலாம்.

மேலும் படிக்க : நவக்ரஹ தோஷங்களை போக்க தேவிப்பட்டினம் செல்லுங்கள்

ஆஞ்சநேயரின் காயத்ரி மந்திரம்

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’ .

என்ற ஆஞ்சநேயரின் காயத்ரி மந்திரம் உச்சரிக்கலாம். இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் துன்பம் விலகி, இன்பங்கள் பெருகும். நினைத்த காரியங்கள் கைகூடும். சகல மங்களங்களும் கிடைக்கும். சனி பெயர்ச்சி நடப்பவர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபட உதவுகிறது.

மேலும் படிக்க : ஸ்ரீ வைத்யநாத ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *