கொரோனா வைரஸிற்கு அடுத்து சீனாவில் ஹண்டா வைரஸ்…!
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்துகொண்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் இன்னும் அதன் பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். சீனாவின் வுகான் மாகாணத்தில் முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. ஆரம்பத்தில் எதனால், எங்கிருந்து, எங்கே, எப்படி உருவானது போன்ற எந்த விவரங்களும் தெரியாமல் சீனா மிரண்டு போனது. எப்படி கையாளுவது என்று தெரியாமல், அதற்கு பிறகு சுதாரித்து மக்களுக்கு நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து பலரையும் மீட்டது.
144 தடை உத்தரவு
சீனாவில் தற்போது இதனுடைய பாதிப்பு குறைந்து இருக்கும் நிலையில் மற்ற உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். மக்கள் தங்களை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்ற பயத்தில் உறைந்து இருக்கிறார்கள். இதற்கு ஒரே மருந்து தனித்து இருப்பதுதான் என்று உலக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். அதற்காக உலகநாடுகள் பணியாளர்களுக்கு விடுமுறை விட்டு 144 தடை உத்தரவு கொண்டு வந்து மக்களை தனித்து இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள்
இந்நிலையில் சீனாவில் ஷடாங் மாகாணத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவர் இறந்தார். இவரை சோதித்து பார்த்ததில் அவருக்கு கண்டா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பேருந்தில் பயணித்த 32 பேரையும் மறுத்தவர்கள் சோதித்தனர். இந்த வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அங்கு இருக்கும் ஹோட்டல், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த வைரஸ் பரவாது.
எலியை தாக்கும் இந்த வைரஸ் விலங்குகளைத் தாக்காது. மனிதனை தாக்கும். எலியின் சிறுநீர், எச்சில் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்கு பரவும். ஆரம்பத்தில் இதனுடைய அறிகுறியாக காய்ச்சல், குளிர் தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, அடிவயிற்று வலி இருக்குமாம். இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வருமாம். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லுமாம். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது. தற்போது இந்த வைரஸ் தாக்குதலும் சீனாவிற்கு அடுத்து தலைவலியாக அமைந்துள்ளது. என்னதான் இது மனிதனிடமிருந்து மற்றும் மனிதனுக்கு பரவாது என்று நிம்மதி இருந்தாலும் எலி போன்ற சந்துக்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வேண்டும். சிலி, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் மிகவும் அரிதாக இந்த வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவியுள்ளது. அதற்கு கண்டா வைரஸில் இருந்து மாறுபடும் ஏன்டிஸ் வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
மக்களே விழிப்புணர்வுடன் இருந்து செயல்படக்கூடிய தருணம் இது. உயிரை விலை கொடுத்து வாங்க முடியாதது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இனியும் எவ்வித நோய்களும் கிருமிகளும் பரவாமல் இருப்பதற்கு, நாம் தான் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டு நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பதையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வது நமது கடமை. நோய் தாக்கும் கிருமிகளை துரத்தி அடித்து, நோயற்ற வாழ்வை வாழ்வோம்.