வாஸ்துப்படி நாள்காட்டியை எப்படி மாட்டலாம்
நம் வீட்டில் காலண்டர் சரியான திசை நோக்கி வைக்கிறோமா என்பதை அறிந்து அதன்படி வைக்க வேண்டும். பழைய வருடத்தின் காலண்டர்களை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். தனக்குப் பிடிக்கும் என்பதால் கடவுள் படம் கொண்ட காலண்டரை வாங்கி எல்லா அறைகளிலும் வீடு முழுவதுமாக தொங்க விடும் பழக்கம் உள்ளது. நாள்காட்டியை பயன்படுத்துவதற்கு என்று சில முறைகள் உள்ளன. வாஸ்துப்படி வைக்க வேண்டிய இடம்.
சாமி காலண்டர் வெறும் காலண்டர் ஆக இருந்தாலும் அதற்கு என்ற திசையில் மாட்டுவது சரியான முறை. நம்மை கடந்து செல்கின்ற நாட்களையும், நல்ல நேரங்களையும் காட்டுகிற நாள்காட்டியை சரியான திசை நோக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் முடிய, முடிய அந்த வருட காலண்டர் ஐ அகற்றி விடுவோம். சாமி படங்கள் உள்ளதால் பூஜை அறையில் வைத்து வழிபட்டு விட்டு ஒரு வருடம் முடிந்ததும் அதை தூக்கி எறிதல் கூடாது. முடிந்தவரை பூஜை அறையில் வைத்து வழிபடுவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் காலண்டரை மேற்கு சுவரில் மாட்ட கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். அதே போன்று தெற்கு சுவரில் மாட்ட நாள்காட்டி வடக்கு திசை நோக்கி பார்க்குமாறு காலண்டர் இருக்க வேண்டும். நாம் பார்க்கும் போது தெற்கு நோக்கி நின்று பார்ப்பது போல் அமையும். இதைத்தவிர வடக்கு சுவற்றிலோ, கிழக்கு சுவரில் காலண்டரை மாட்டி வைக்கக்கூடாது. இப்படி திசைமாற்றி மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க : ஸன்யஸ்த மகாளயம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வடக்குப் பார்த்து தெற்கு சுவற்றில் காலண்டரை மாற்றி வைப்பதால் அதிகப்படியான நன்மைகளை வழங்கும். கிழக்கை பார்த்தவாறு மேற்கு சுவரில் மாற்றுவதால் நல்ல அதிர்வலைகளை வீட்டிற்கு கொண்டு வரும். எனவே இதைப் படித்து நீங்களும் வீட்டில் எந்த திசையில் மாட்டி இருந்தாலும் அதை சரியான திசையில் வைத்துப் பார்த்தால் மாற்றத்தை உணர முடியும்.
மேலும் படிக்க ; வாழ்வில் ஒரு முறையாவது திருவோண விரதம் இருங்க.!