இத செஞ்சா! நீங்க வேண்டாம்னு சொன்னாலும் விடாது..
இயற்கை பொருட்களை வைத்து இயற்கை முறையில் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தலைமுடியை பராமரிக்கலாம். இதனால் முடி பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா? இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. இதனால் சொட்டை உள்ள இடத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
- முடி உதிர்வு பிரச்சனைக்கு தலைமுடியை இயற்கை முறையில் பராமரிக்க.
- முடியை பாதுகாத்துக் கொள்ள.
- முடி வளர்ச்சியை தூண்ட.
வேறு காரணங்கள்
தலை முடி உதிர்வது, சொட்டையாவது, வெள்ளை முடி இவற்றிற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு காரணங்களும் உண்டு, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது. மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளும் அடங்கும்.
மசாஜ் எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய், 15 பூந்திக்கொட்டை, ஐந்து சீகைக்காய் பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சி கொதிக்க வைத்து ஆற விட்டு வடிகட்டி எடுக்கவும். பிறகு தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் இந்த தண்ணீருடன் கலந்து தலை முழுவதும் வேர் பகுதியில் லேசாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முடியை அலச வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வரலாம்.
வறட்சி நீங்க
தேங்காய் எண்ணெயில் நெல்லி 4 போட்டு காய்ச்சி வடிகட்டி ஆற வைத்துக் கொண்டு தினமும் தலைக்கு தடவி மசாஜ் செய்ய முடி வளர்ச்சி தூண்டப்படும். இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து மையாக அரைத்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்தால் தலைமுடி வறட்சி நீங்கி உதிர்வது நிற்கும். சாஃப்டாக இருக்கும்.
முடி வளர்ச்சி
முட்டை மஞ்சள் கருவுடன் தேன் கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்தால் சொட்டையில் முடி வளரும். வெங்காயத்தை அரைத்து வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வர இரத்த ஓட்டத்தை தூண்டி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மருதாணி இலையை கடுகை எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து தலைக்குத் தடவி வரலாம்.