கார்கூந்தல் அழகிற்கு கணகட்சிதமான டிப்ஸ்..!!
கண்டிஷனரை தனியாக உபயோகப்படுத்தினால் மேலும் உபயோகிப்பதற்கு முன் இரண்டு முறை ஷாம்பூவினால் கூந்தலை நன்கு அலசவும். தலைக்கு குளித்து முடித்த பின், கடைசியில் ஒரு குவளை தண்ணீரில் சிறிது வினிகர் அல்லது எலுமிச்சை பழச்சாறு கலந்து முடியை அலசினால் கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
இயற்கையான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற பூந்திக்கொட்டையை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து எடுத்த அந்த சாரை தலையில் தேய்த்து குளிக்க ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். இந்தக் பிழிந்தெடுத்த நீரை ஷாம்பு ஆகவும் பயன்படுத்தலாம்.
ஷாம்புவை உபயோகிப்பதை தவிர்த்து சீயக்காய் பயன்படுத்த அல்லது விதை நீக்கப்பட்ட நெல்லிக் காய்களை, எலுமிச்சை பழ சாறு விட்டு நன்றாக அரைத்து மாதம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால், இளநரை மறைந்துவிடும். முடி உதிர்வதும் கட்டுப்படும். சில பெண்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி தோன்ற ஆரம்பிக்கும். அடிக்கடி ஷாம்புகளை உபயோகிப்பதை தவிர்த்து விடவும்.
ஆரோக்கியமான கூந்தலுக்கு
மாசு நிறைந்த சுற்றுச்சூழல் காரணமாக கூந்தலை அலசுவது நல்லது. கண்டிஷனர்கள் உபயோகப்படுத்து வதால் நம் கூந்தல் அதிக நேரம் மிருதுவாக இருக்கும். அடிக்கடி கூந்தலுக்கு எண்ணெய் உபயோகிப்பது நல்லது என்பதற்காக இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை. குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வைத்தாலே போதுமானது. ஆரோக்கியமான கூந்தலுக்கு 500 மில்லி தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் கையளவு துளசி இலைகள், காய்ந்த செம்பருத்தி இலைகள் மற்றும் சாமந்தி இலைகளைப் போன்று ஒரு நாள் ஊற வைத்து பின் உபயோகிக்கவும்.
இளநரையை தடுக்க மருதாணி கலவையுடன் காப்பித் தூள் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து அலசலாம்.கூந்தலுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உபயோகித்தால் முட்டையில் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். தேங்காய் எண்ணெய், முட்டை மஞ்சள் கருவுடன் கலந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்தால் வறட்டுத்தன்மை மற்றும் பிளவுபட்ட முடிகளை தவிர்க்கலாம்.
கருவளையத்தைப் போக்க
கருவளையங்கள் சரியாக இருக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக்கோங்க அரை தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு எடுத்துக் கோங்க கடலை மாவு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கருவளையம் மீது தடவி 10 லிருந்து 15 நிமிடம் வரைக்கும் காயவைத்து பிறகு கழுவுங்கள்.
கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்க, குளிர்ந்த பச்சை உருளைக்கிழங்கு ஒரு துண்டு கண்கள் மேல வைங்க. கருவளையத்தைப் போக்க பஞ்சை குளிர்ந்த பாலில் நனைத்து கண்களை மூடி மேலே வைத்துக் கொள்ளலாம் இதெல்லாம் செய்றதால நாளடைவில் உங்கள் கருவளையங்கள் சரியாயிடும்.