Videosசெய்திகள்தமிழகம்தேசியம்வாழ்வியல்

கின்னஸ் சாதனை புரிந்த சென்னை இளைஞர்

ஆயிரம் தடைகள் வந்தாலும் லட்சியத்தை அடைய வேண்டும் எனும் தீ நம்மை அயராது வேலை செய்ய வைக்கும். இந்த வரிக்கு எடுத்துக்காட்டாக சாதனை புரிந்துள்ளார் சென்னை நகரத்தில் இளைஞர்.

25 வயது இளஞர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். சென்னை நகரத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இளையராம் சேகர் கின்னஸ் சாதனையை முறியடிக்க சாதனை புரிந்தார்.

ரூபிக் ஸ்கொயர் என்று சொல்ல பல வண்ணம் கொண்ட சதுரங்கத்தில் ஒவ்வொரு பக்கமும் ஒரே வண்ணம் கொண்டவாறு சரி செய்வது இந்த விளையாட்டு. சாதாரணமாக இதனை சரி செய்வது என்பதே மிகவும் கடினமான விஷயமாகும். அதிலும் தண்ணீரின் அடியில் இருக்கும் பொழுது சுவாசத்தை சீராக அடக்கிக் கொள்வது மற்றொரு சவால். தண்ணீர் அடியில் இருந்துக்கொண்டு சுவாசத்தை சீராக அடக்கி எவ்வளவு ரூபிக் ஸ்கொயரை சரி செய்வது என்பதே இந்த சாதனை. இந்த இரண்டு சாதனையையும் புரிந்துள்ளார் இளையராம் சேகர்.

2014ல் தண்ணீர் அடியில் 5 ருபீக் ஸ்கொயர்களை சரி செய்து சாதனை புரிந்தவரை 6 வருடத்திற்குப் பின் முறியடித்துள்ளார் இளையராம் சேகர். இவர் 2.17 நிமிடங்களில் 6 ருபீக் ஸ்கொயர்களை சரி செய்துள்ளார். பழைய சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல் இவர் தான் ஆசியாவிலேயே முதல் முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

“நான் பழைய சாதனையை 6 வருடத்திற்குப் பின்பு முறியடித்து உள்ளேன். ஆசியாவிலேயே இந்த சாதனையை புரிய நான் தான் முதல் ஆள். நான் சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். என் மாணவர்களுக்கு பல சாதனைகளைப் புரிய ஒரு உத்வேகத்தை தரவே இந்த சாதனையை நான் புரிந்தேன். கொரோனாவால் ஏற்பட்ட இந்த நிலை வந்து போனாலும் நம் மனம் மூளை நம்மை பெரிய அளவில் சாதிக்க வைப்பதோடு வாழ்க்கையில் அனைத்தையும் எதிர்கொள்ளும் திடத்துடன் இருக்க வேண்டும்” எனக் உத்வேகம் உரையாற்றியுள்ளார் இளையராம் சேகர்.

இருக்கும் நிலையில் யாரேனும் எவரேனும் உக்குவிக்க மாட்டார்களா என்று ஏங்குபவர்களின் மத்தியில் உத்வேகத்துடன் செயல்படும் திறமைசாலிகள் சாதனையாளர்களும் வாழ்கின்றனர். பிறரை எதிர்பார்த்து கொண்டு இருந்தோமாயின் வாழ்க்கையை வாழ்வது கடினமாக இருக்கக் கூடும். நம் வாழ்க்கை நம் கையில் என்ற வாக்கியத்திற்கு இணங்க சிறப்பாக செயல்பட்டு சிறப்பாக வாழ்வோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *