யாவரும் செய்யலாம் நவராத்திரி பூஜை
நவராத்திரி! துர்கா பூஜா! பத்து நாட்கள் கொண்டாட்டம் தான் நினைவுக்கு வருகிறது. நவராத்திரிகளில் விதங்கள் உண்டு புரட்டாசி அமாவாசை கழிந்து வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி எனப்படுகிறது. அருமையான அலங்காரங்களும் ஆங்காங்கே கொண்டாட்டங்களுமாக நாடே குதூகலமாக இருக்கும் சமயம் இது.
- அமாவாசை கழிந்து பிரதமையில் தொடங்கி தசமி வரை நடப்பது நவராத்திரி.
- விஜயதசமியுடன் பூர்த்தியாகிறது நவராத்திரி.
- மகிஷனை வதம் செய்வது நவராத்திரியின் கதை.
- நவராத்திரி பூஜைக்கு தேவையானது.
நவராத்திரி
புரட்டாசி அமாவாசை 16 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை வருகிறது. 17 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நவராத்திரி. அதாவது அமாவாசை அடுத்த நாளான பிரதமை துவங்கி ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாள் விஜயதசமியுடன் நவராத்திரி நிறைவடைகிறது.

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி
பிரதமை துவிதியை திருதியை துர்க்கைக்கான பூஜை செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி லக்ஷ்மிக்கான பூஜை செய்ய வேண்டும்.
சப்தமி அஷ்டமி நவமி சரஸ்வதிக்கான பூஜை செய்ய வேண்டும். துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்திரம், ஸத நாமாவளி, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களுடன் பூஜை செய்யலாம்.
மேலும் படிக்க : ஆன்மிகத் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
மகாநவமி
மகா நவமி அன்று சரஸ்வதி பூஜை செய்கிறோம். சரஸ்வதி பூஜை அன்று நாம் செய்யும் தொழிலை சார்ந்த பொருட்களை வைத்து சரஸ்வதி அஷ்டோத்திரம் கூறி பூஜை செய்ய வேண்டும். நிறுவனம் நடத்துபவர்கள் இந்நாளில் ஆயுதபூஜையாக கொண்டாடுகின்றனர். அன்று பூஜை செய்து மறுநாள் விஜயதசமி அன்றுதான் வேலையை தொடங்குவார்கள்.

விஜயதசமி
துர்க்கா லட்சுமி சரஸ்வதியாக மகிஷனை போரிட்ட அம்பாள் விஜயதசமி அன்று ஒருமுகமாக இணைந்து மகிஷனை வதம் செய்தார். வெற்றி பெற்ற இந்த நன்னாளில் அம்பாளை பூஜிக்கும் பக்தர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்ற தாத்பரியத்துடன் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
குறிப்பு
ஸ்லோகங்களில் உச்சரிப்பு பிழை இருக்கிறதே என்ற கவலை வேண்டாம் அம்பாளுக்கு ஆத்மார்த்தமாக ‘தாயே காப்பாற்று’ என்று அவளின் நாமத்தை கூறி புஷ்பத்தை பூஜிக்க அவளின் மனம் குளிர அருளுவாள். ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு செய்யாமல் இருப்பது நம் சோம்பேறித் தனத்தின் காரணம் அது தவறு.
பூஜை பொருட்கள்
பொதுவாக பூஜைக்குத் தேவையான ஊதுபத்தி, கற்பூரம், எண்ணை, திரி, பூக்கள், கலசம் சொம்பு, மாவிலை, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், குத்துவிளக்கு அதற்கான அலங்கார வஸ்திரம் போன்றவற்றை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

புஷ்பங்கள்
அம்பாளுக்கு உகந்த விருக்ஷி, அரளி, பன்னீர் ரோஸ், தாமரை, மல்லி, ஜாதி, முல்லை, சம்பங்கி என அனைத்து வாசனை புஷ்பங்களும் மாதுளை பழ முத்துகள் மருதாணி இலை போன்றவற்றாலும் அம்பாளை அர்ச்சிக்கலாம்.
மேலும் படிக்க : கல்வி கலை, தொழில் வியாபாரம் வெற்றியடைய புதன் கிழமை விரதம்
அவள் அருளாலே அவளை பூஜித்து அவளின் அருளைப் பெறுவோம். நவராத்திரிக்கான பிரசாதங்கள் பாயசம் சுண்டல் வகைகள் போன்றவை தொடரும்.