அன்பும் உறவும்வாழ்க்கை முறை

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை சொர்க்கமாக மாற்றுவது

திருமணம் பந்தம் தொடர்ந்து சிக்கல் இல்லாமலும், மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் குடும்பத்தை நடத்தி செல்வதற்கு கணவன்-மனைவி தான் பொறுப்பு ஏற்கிறோம். நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும். சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன்-மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

கணவனும் மனைவியும் தனித்தனியே வெளியில் சென்றாள் சீக்கிரமாக வீடு திரும்பி வர வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். மனைவியை ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும், வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

மனைவியை ஏற்றது போல் மனைவியின் குடும்பத்தாரையும் முழுமனதாய் கணவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். கணவனை ஏற்றது போல் கணவனின் குடும்பத்தாரையும் முழுமனதாய் மனைவி ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வாழ்வதால் முதியோர் இல்லங்கள் நிச்சயமாக குறைந்துவிடும்.

அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு ஏமாற்றம் என்று நினைத்து அவளை திட்டுவது கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணமான புதிதில் உங்க அம்மாவும் இப்படிதான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக் கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவதுதான் சமையல் என்பதை ஒவ்வொரு கணவன் மாறும் உணரவேண்டும்.

கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது. அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறான செயல். படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர். நாம் கண் கூடாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரைப் பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரைப் பற்றி கணவனும் பேசுதல் கூடாது. இது தவறுகளில் மிகப்பெரிய தவறாக கூறப்படுகிறது. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீடு தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்புத் தந்து சொல்வதை காதில் வாங்கி பதில் கூற வேண்டும். இருவரிடமும் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்கும். என்ற பயத்தை ஒருபோதும் மனைவிக்குக் கணவனும், கணவனுக்கு மனைவியும் தந்துவிடக் கூடாது.

பொய்யின் ஆரம்பமே பயம்தான். திருமணமாகி புதிதாக உறவை தொடங்கும் முன் இருவரும் தன்னை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து சென்றாலே வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை சொர்க்கமாக மாற்றுவது நம் கையில் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *