கிச்சனில் அழையா விருந்தாளியை விரட்டியடிக்க டிப்ஸ்..!!
கிச்சனில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள், ஈக்கள், வராமல் தடுப்பதற்கு என்னென்ன வழி முறைகளை கையாளலாம். என்று இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் பூச்சி, கொசு கட்டுப்படுத்த பூச்சிகளை கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருக்காங்க. அவங்களை வரவழைத்து வீட்டை சுத்தம் செய்யவும். ஸ்வெட்டர், கம்பளி, சணல், துணி வகை பூச்சியில் இருந்து பாதுகாக்க, காய்ந்த வேப்பிலைகளை அதனுடன் போட்டு வைக்க வேண்டும்.
கரப்பான் பூச்சிகளுக்கு விருந்து
விரிசல் விழுந்த சுவற்றில் பூச்சிகளை அகற்ற சிறுதுளி பினாயிலை ஊற்றலாம். இதனால் பூச்சி, கரப்பான் தொல்லை இருக்காது. கரப்பான் பூச்சிகளுக்கு விருந்து கொடுக்க வேண்டுமா? இதோ ஓர் இரவு முழுவதும் பீர் பாட்டிலை வைக்க அந்த வாசனை பூச்சிகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் பாட்டிலின் உள்ளே சென்று ஒளிந்து விடும். ஆனால் வெளியில் வர வழியில்லை.
சாம்பல் மற்றும் மஞ்சள் தூள் கலக்கி சுவற்றில் இடுக்குகளில் தூவி விடலாம் அல்லது புகையிலையை தண்ணீரில் கலந்து துடைத்து எடுக்கலாம். கடைகளில் கிடைக்கும் எரும்பு மருந்துகளும் வீரியம் உள்ளது. எறும்பு சாக்பீஸ் கடைகளில் கிடைக்கின்றது. அதையும் உபயோகப்படுத்தலாம் கோடு போட்டு வைக்க வேண்டும். இதனால் எறும்புகள் தொல்லை இருக்காது.
பூச்சிகள் அரிசி பருப்பு மற்றும் மாவுப் பொருட்களின் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால், புதிய காய்ந்த பாகற்காய் துண்டுகளை டப்பாவில் போட்டு வைத்து விடணும். இதனால் பூச்சிகள் அண்டாது. தானியங்கள், மசாலா பொருட்களில், பூச்சி, வண்டுகள் மற்றும் பூஞ்சை காளான் பிடிக்காமல் இருக்க, டப்பாவின் நாளிதழ்களை சுருட்டி வைக்கவும். இவ்வாறு செய்வதால் அதில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும்.
ஆரஞ்சுத் தோல்
எறும்புகள் மற்றும் ஈக்கள் தொல்லையிலிருந்து விடுபட சமையலறையில் உள்ள அலமாரிகள் மற்றும் தரையை வினிகரை பயன்படுத்தி நன்கு துடைத்து எடுக்கலாம். இதனால் தொல்லைகள் இருக்காது. கரப்பான் பூச்சிகளை விரட்ட சமையல் அறைகளில் ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பின்பு பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்கலாம். பூச்சிகள் ஒழிக்க முடியும். காய வைத்த ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராமல் பாதுகாக்க முடியும்.
ஈக்கள் வராமல் இருக்க துடைக்கும் தண்ணீருடன் 2 தேக்கரண்டி உப்பை கலந்து துடைக்க, இதனால் பூச்சிகள் வராது. கொசுக்களை விரட்ட மேலும் ஒரு வழி இருக்கிறது. தட்டில் துளசி இலைகளை போட்டு கொசு தொல்லைகள் உள்ள அறையில் வைக்க வேண்டும். அதிகப்படியான கொசு தொல்லையா? கவலையே வேண்டாம். ஒரு தட்டுல கற்பூரத்தை தண்ணீருடன் கலந்து அந்த அறையில் வைத்தால் கொசுக்கள் எட்டிக் கூட பார்க்காது. இதனால நம்ம வீடு சுத்தமாகவும், பூச்சிகள், வண்டுகள் இடம் இருந்து நம்மையும், நம் வீட்டையும் பாதுகாக்கலாம்.