Tnpsc GK 2023:போட்டித் தேர்வில் கேட்கும் ஜிஎஸ்டி(GST) பற்றிய பொது அறிவு வினா விடை
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். எனவே சிலேட்டு குச்சியின் சார்பாக ஒரு சில பொதுஅறிவு வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது?
விடை : ஒரு முனை வரி
2. GST பற்றி கூறும் அரசமைப்பு திருத்த சட்டம் எது?
விடை : 101 வது அரசமைப்பு திருத்தசட்டம்
3. GST கவுன்சில் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : புதுடெல்லி
4. VAT முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம் எது?
விடை : ஹரியானா
5. ஒரே நாடு ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
விடை : GST
6. இந்தியாவில் வருமான வரி சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
விடை : 1860
7. சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : மார்ச் 29, 2017
8. 2023 இன் படி GST கவுன்சில் தலைவர் யார்?
விடை : நிர்மலா சீதாராமன்
9. இந்தியாவில் உள்ள GST இரட்டை வரி அமைப்பு எந்த நாட்டு மாதிரியை பின்பற்றுகிறது?
விடை : கனடா
10. GST மசோதாவை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலம் எது?
விடை : பீகார்