ஹேர் ஆயிலை வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்க
கூந்தலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர், தட்பவெட்பநிலை மாற்றம், கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாடு, புரோட்டீன் குறைபாடு ஆகியவற்றின் மூலமாக முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைத் தடுப்பதற்காக இந்த ஆயிலை உபயோகித்துப் பார்க்கலாம்.
முடி நன்றாக வளரவும். முடிக்கு மசாஜ் செய்வதற்கும். இந்த ஹேர் ஆயிலை வீட்டிலேயே இயற்கையாக தயாரித்து பயன்படுத்தலாம். ஹேர் கிரவுத் ஆயில் பிரிபரேஷன்.
தேவையான பொருட்கள்
நொச்சி இலை, முருங்கை இலை, கறிவேப்பிலை, மருதாணி இலை, அருகம்புல், கரிசலாங்கண்ணி, கொய்யா இலை, வேப்பிலை, செம்பருத்தி இலை, துளசி இலை போன்ற இலைகளை தலா ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி ஒரு துண்டு, கற்றாழை ஜெல் 50 மில்லி, வெந்தயம் 20 கிராம், எலுமிச்சை 2, நெல்லிக்காய் 5, சின்ன வெங்காயம் 50 கிராம், பெரிய வெங்காயம்-2, செம்பருத்தி பூ 50 கிராம், கருஞ்சீரகம் 10 கிராம், வெட்டிவேர் 20 கிராம், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர்.
இவையெல்லாம் சேர்த்து காய்ச்சிய ஆயிலை தலைக்குத் தேய்த்து வர நல்ல இம்ப்ரூவ்மென்ட் உங்கள் முடிக்கு கிடைக்கும். தலைபாரம் நீர்க்கோர்வை போக்கும். எண்ணைக் குளியலுக்கு பல வருடங்களாக பயன்படுத்தி வந்தால் முடி கொட்டும் பிரச்சனை குறையும்.
புது முடி வளர ஆரம்பிக்கும். முடி சில்கி ஆக இருக்கும். பொடுகு பிரச்சனை நீங்கி முடி நன்றாக வளரும். இதைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும். முடிந்தவர்கள் இதை தயாரித்து பயன்படுத்தி பார்க்கலாம்.