குரூப் 2 தேர்வுக்கான மொழிப் பாட குறிப்புகள் !
போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மொழிப்பாடம் குறித்த தெளிவு இருக்க வேண்டும். மொழிப்பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெற்றிக்கான துருப்புச் சீட்டினை மொழிப்பாடம் கொண்டுள்ளது. உங்களது வெற்றியை உறுதி செய்யும் முக்கிய பகுதியாக மொழிப்பாடம் உள்ளது. இதுகுறித்து தெளிவாக போட்டி தேர்வர்கள் இருக்க வேண்டும்.
அது படிப்போம் இது படிப்போம் தமிழ்தானே பிறகு படிக்கலாம் என நினைப்பது தவறு பொது அறிவுக்கு கொடுக்கும் நேரத்தை விட சற்று அதிகமாக மொழிப் பாடத்திற்கு கொடுக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நீங்கள் 100% மதிபெண்கள் பெறுவதில் உறுதியாக இருக்க வேண்டும். கண்ணுக்கு கிடைக்கும் மொழிப்பாட குறிப்புகளை கட்டம் கட்டி படிங்க. நிச்சயம் தேர்வுக்கு கை கொடுக்கும். படித்தவற்றை திரும்ப சொல்லி பாருங்க.
இலக்கண குறிப்பு, பிரித்து எழுதுக, திருக்குறள் விளக்கம், செய்யுள் தொடர்ச்சி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துங்க, உங்களை தடுமாற வைக்க முயற்சி செய்யும் அந்த குறிப்பிட்ட பகுதிகளை நீங்கள் தான் முடக்க வேண்டும்.
உங்களுக்கு உதவிகரமாக இருக்க சிலேட்குச்சி இந்தியா தமிழ் மொழிப் பாடத்தில் இருந்து ஆங்காங்கே எடுக்கப்படட் குறிப்புகளை தொகுத்து வழங்குகின்றது அதனையும் உங்கள் ரிவிசன் செக்ஸனில் இணைத்து படியுங்கள். கனவு வாரியத்தின் நாயகர்கள் நாயகிகள் நீங்கள் என்னும் நம்பிக்கையில் படிங்க.
வேற்றுமைத் தொகை:
வேற்றுமைத் தொகை என்பது வேற்றுமை உருபோ அல்லது உருபும் அதனுடம் பயனும் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
இரண்டாம் வேற்றுமைத் தொகை
வில்லை வளைத்தான் இங்கு (ஐ) மறைந்து வருகின்றது.
சோறு சாப்பிட்டேன், கொசுவலை, பஸ்பிடித்தேன், வீடூ கட்டினேன் போன்ற சொற்களை சேர்த்து கூறும் பொழுது ஐ மறைந்து வருவதை காணலாம்.
மூன்றாம் வேற்றுமைத் தொகை:
மூன்றாம் வேற்றுமைத் தொகை (ஆல், ஓடு,ஒடு) போன்றவை வேற்றுமை உருபில் வருபவை ஆகும்.செருப்படி, கல்லடி, தடியடி, வெள்ளி கிண்ணம், மரப் படகு, இரும்புப் பெட்டி, இவ்வற்றில் மறைந்து வருகின்றது.
நான்காம் வேற்றுமைத் தொகையில் (கு) வரும.என் ஆசிரியர், என் மனைவி, என் மகன், தோசை மாவு, சொற் பொருள், கோழித் தீவனம்
ஐந்தாம் வேற்றுமை தொகையில் (இன்) வரும் மலையருவி= மலையின்கண் இருந்து விழும் அருவி
ஆறாம் வேற்றுமைத் தொகையில் (அது/உடைய)என் வீடு, என்னுடைய வீடு, என் கால், என் பெயர், நின்னகர், என்பதி நின்பணி, கார்குலான், என்னுயிர், வழிக்கரை, தன்ஒன்னார், வேந்தன்பொருள், செறுநர் செருக்கு, நதிப்பரப்பு,
ஏழாம் வேற்றுமை தொகையில் (கண் )மலையின் கண் உள்ள பாதை, மடக் கொடி, அங்கணர், = மலைப் பாதை, மாடி வீடு, மலை குகை போன்றவை வரும்.
அன்மொழித் தொகை :
தொகையின் இல்லத ஒரு சொல் வருவது அல்+மொழி=அன்மொழி, அஃறிணைப் பெயர், உயர் திணைப் பொருள உணர்த்தி வந்தால் அதனை அன்மொழித் தொகை என்றும் கூறுவார்கள். கயல்விழி வந்தாள்= கயல் போன்ற விழி உடைய பெண் வந்தாள்உயர்திணைப் பெயரைக் குறித்ததால் இது உம்மைத் தொகை புறத்துப் பிறந்த மொழித் தொகை ஆகும்.
வெள்ளை ஜிப்பா எழுந்திரு, மடக் கொடி= பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.
பாவாடை தாவணி – உம்மைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாக வந்துள்ளது.
இவ்வாறு மொழிப்பாடத்தில் எங்கு எந்த பதம்வரும் என்பதை அறிந்து படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது அது சார்ந்த பயிற்சி சரியாக செய்ய முடியும்.