Group 4 tamil : குரூப்-4 தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
புறத்திணைகள் எத்தனை வகைப்படும் ?
விடை : 12
2. அண்ணம் நுனிநா வருட எவ்வெழுத்துக்கள் தோன்றும் ?
விடை : ரழ வரும்
3. திருவள்ளுவ மலையில் திருக்குறளை புகழ்ந்து பாடிய புலவர்கள் எத்தனை பேர் ?
விடை : 53
4. அஷ்டபிரபந்தம் என்பது எதனை குறிக்கிறது?
விடை : 8 சிற்றிலக்கியங்கள்
5. மணிமேகலை அமுத சுரபியை பெற்றெடுத்த உதவியவர் யார் ?
விடை : தீவதிலகை
6. உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலை எழுதியவர் யார் ?
விடை : தால் சுதாய்
7. தண்டமிழ் ஆசான் என்று போற்றப்படுபவர் யார் ?
விடை : சீத்தலைச் சாத்தனார்
8. கலம்பக உறுப்புகள் மொத்தம் எத்தனை ?
விடை : 18
9. சங்கமலி தமிழ் என்று கூறியவர் யார் ?
விடை : திருமங்கையாழ்வார்
10. உரைநடை எழுதுவது எனது தொழில் என்று கூறியவர் யார் ?
விடை : திரு.வி. கல்யாணசுந்தரனார்