Tnpsc Tamil 2024 : குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்ட முந்தைய ஆண்டு வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நூல் எது ?
விடை : நற்றிணை
2. தென் ஆப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் கூறினார் ?
விடை : தில்லையாடி வள்ளியம்மை
3. ஞானபோதினி என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ?
விடை : மு. சி பூர்ணலிங்கம்
4. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன ?
விடை : துரை மாணிக்கம்
5. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞர்கள் வாதம் ஒரு விளக்கு என்று கூறியவர் யார் ?
விடை : அண்ணா
6. பண்ணொடு டு கலந்தும் தாளத்தோடு கூடிய கலை எது ?
விடை : இசைக்லை
7. தாழ்பூந்துறை என்பதன் இலக்கண குறிப்பு தருக
விடை : வினைத்தொகை
8. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு – என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
விடை : கூழை எதுகை
9. அகத்திணையும் புறத்திணையும் சேர்ந்து கூறும் எட்டுத்தொகை நூல் எது ?
விடை : பரிபாடல்
10. செல்வச் செவிலி என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
விடை : உருவகம்