Group 4 tamil : குரூப் 4 தேர்விற்கான பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?
விடை : மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
2. உழவர் ஏரடிக்கும் கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல் என்று கூறியவர் யார் ?
விடை : கம்பர்
3. யாருடைய சாயலில் பாரதியார் வசன கவிதை எழுதத் தொடங்கினார் ?
விடை : வால்ட்விட்மன்
4. கங்கையும் சிந்துவும் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக ?
விடை : எண்ணும்மை
5. சுதமதி என்பவர் யாருடைய தோழி ஆவார் ?
விடை : மணிமேகலை
6. தமிழரின் வாழ்வியல் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
விடை : புறநானூறு
7. நாளை என் தமிழ்மொழி சாகும் எனில் இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர் யார் ?
விடை : ரசூல் கம்சதேவ்
8. விருந்தே புதுமை என்று கூறியவர் யார் ?
விடை : தொல்காப்பியர்
9. தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று போற்றப்படுபவர் யார் ?
விடை : மெளனி
10. குழந்தை இலக்கிய முன்னோடி என்று போற்றப்படுபவர் யார் ?
விடை : மயிலை சிவமுத்து