Group 4 current affairs: குரூப் 4 தேர்வில் கேட்கும் நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1. தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தவர் யார் ?
விடை : அருண் ஜேட்லி
2. தேசிய மகளிர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : பிப்ரவரி 13
3. இல்லம் தேடி கல்வித் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது ?
விடை : 27 அக்டோபர் 2021
4. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தலைமைச் செயலர் யார் ?
விடை : சிவ்தாஸ் மீனா
5. 2024 ஆம் ஆண்டிற்க்கான சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யார் ?
விடை : S.V கங்கா பூர்வாலா
6. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார் ?
விடை : சத்ய பிரதா சாஹு
7. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் தொடங்கப்பட்ட நாள் ?
விடை : பிப்ரவரி 13
8. எக்ஸ்போசாட் செயற்கைகோளின் எடை எவ்வளவு ?
விடை : 469 kg
9. மிலன் 2024 எனும் கூட்டு கடற்படைப் பயிற்சி எங்கு நடைபெற உள்ளது ?
விடை : விசாகப்பட்டினம்
10. தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின பெண் நீதிபதி யார் ?
விடை : ஶ்ரீபதி