குரூப் 2 – தவறான 9 கேள்விக்கான மதிபெண்கள் அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கான இளநிலை அலுவலர், சார்பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் நகராட்சி ஆணையாளர் உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு 1199 காலியிடங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
தேர்வு மையங்கள்
குரூப் 2 தேர்வுக்கான போட்டி தேர்வு நவம்பர் 11, 2018இல் நடைபெற்றது. இதற்காக 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் எழுதியுள்ளனர். 6,26,726 பேர் எழுதிய தேர்வில் 3, 54,245 பெண்கள் தேர்வுகள் எழுதியவர்கள் ஆவார்கள்.
2,72,462 ஆண்களும் மற்ற மூன்றாம் பாலினத்தவர்கள் 10 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். குரூப் 2 தேர்வில் திருசெங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு ஈ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை எனபதில்கள் இருந்தன.மேலும் தந்தை பெரியாரின் பெயர் தவறாக ஜாதி அடையாளத்துடனும் இருந்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இவ்வாறு 6 கேள்விகள் தவறாக விடைகள் இடம்பெற்றுள்ளன. இதன் பொருட்டு 9 கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் உத்தரவு கொடுத்துள்ளார். தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளன.