மணமணக்கும் மாங்காய் சட்னி..
மாங்காய் என்ற வார்த்தையை சொன்னாலே நாவில் எச்சில் ஊறாத ஆட்களே இருக்க முடியாது. மாங்காய் ஊறுகாய் மாங்காய் தொக்கு மாங்காய் குழம்பு , மாங்காய் பொடி வைத்து சாப்பிடுவது ,மரத்திலிரந்து அப்படியே புளிப்பு சுவை நாவில் இருக்க உண்ணும் திருட்டு மாங்காய் என மாங்காயை பிடிக்காதவர்களே இருக்க முடியாது… மாங்காய் பிரியர்களுக்கு இப்படியும் சாப்பிடலாம் என்ற அளவிற்கு நாம் இப்போது பார்க்கப் போகும் மாங்காய் சட்னி அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக இருக்கும்..

பொதுவாக பல வீடுகளில் காலை இரவு நேரங்களில் டிபன் நான் கண்டிப்பாக இருக்கும் அதில் தினமும் என்ன சட்னி அரைப்பது என்று யோசித்து பெண்கள் தினமும் குழம்பி விடுவார்கள்… அவர்களுக்கு இந்த மாங்காய் சட்னி ஒரு வரப்பிரசாதமாக அமையும்..
தேவையான பொருட்கள்
மாங்காய் – 1
காய்ந்த காஷ்மீரி மிளகாய் – 8
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மாங்காய் சட்னி செய்யும் முறை
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் 5 காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு சீரகம் வெந்தயம் உளுந்து ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு மிக்ஸியில் விதை நீக்கி வெட்டிவைத்த மாங்காய் வறுத்த மசாலா மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு உளுந்து 3 காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை அரைத்த மாங்காய் விழுது மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து இறக்கிக் கொள்ளவும். அவ்வளவுதான் சூடான சுவையான மாங்காய் சட்னி தயார் இதனை சூடான சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் இட்லி தோசை பணியாரம் போன்றவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம்..

செய்முறையை சொல்லும்போதே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.. நீங்களும் இந்த மாங்காய் சட்னியை செய்து ரசித்து ருசித்து உண்ணுங்கள்….