வறட்டு இருமலை தடுக்கும் பாட்டி வைத்தியம்..!
தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும்.
சிறிதளவு கொள்ளு எடுத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் மிளகு, புண்டு மற்றும் சுக்கு மூன்றையும் பொடி செய்து கொள்ளவும். சிறிது உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து இம்மருந்தை சற்று சுடாக குடித்து வந்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் வந்த வழியே ஓடிவிடும்.
நான்கு முதல் ஐந்து பல் பூண்டை நெய்யில் நன்கு வதக்க வேண்டும் அதன் பிறகு அதை நன்கு நசுக்கி, சூப்பிலோ அல்லது குழம்பிலோ போட்டு சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இருமல் குணமாக இது ஒரு நல்ல தீர்வாகும்.
குறிப்பு:- எந்த வைத்தியமாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அனுகி அதன் பின் உட்கொள்வது நல்லது.