கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட கண்காட்சி டிசம்பர் 23 முதல்
கோவை கொடிசியா வளாகத்தில் பல்வேறு விளையாட்டுக்களுடன் கூடிய கோவையின் மாபேரும் நுகர்வோர் கண்காட்சி டிசம்பர் 23ம்தேதி முதல், ஜனவரி 1ம்தேதி வரை நடைபெற உள்ளது
கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள கொடிசியா அலுவலக அரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில்,
கோவையின் 9வது பதிப்பாக, கோவை கொடிசியா அரங்கில், வருகின்ற டிசம்பர் 23ம்தேதி முதல், ஜனவரி 1ம்தேதி வரை கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2023 நடைபெற உள்ளது, இதில் 280க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.
மேலும் மத்திய அரசின் கதர் கிராமத் தொழில் கள் ஆணையத்தின் மூலமாக கைவினை கலைஞர்கள் நேரடியாக பங்கேற்க்க உள்ளதாகவும், இதில் நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜின் பட்டிமன்றம், லக்ஸ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர்ஸ் முகேஷ், ஷையத், வானதி, தான்யா ஸ்ரீ பங்கேற்கும் நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, மிமிக்ரி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்குகள் உள்ளது.
கோவையின் பெருமையை உயர்த்தும் வகையில் நுகர்வோருக்கு நல்லதொரு இனிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த திருவிழா அமைய உள்ளது என்றார், இதில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 50 ரூபாயும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட உள்ளது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது