மொழிப்பாட இலக்கண தொகுப்பான ஹைலைட்ஸ் பகுதி 5!
பெயர் சொல்:
பெயர் சொல் ஆறு வகைப்படும்பொருள், இடம், காலம், சினை ( உறுப்பு),குணம் (பண்பு)தொழில் ஆகிய ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் உருவாகும்பொருட்பெயர் – மனிதன், பசு, மயில், புத்தகம்இடப்பெயர்- தஞ்சை, சென்னை, நெல்லை, விருதுநகர்,காலப்பெயர் – மணி, நாள், வாரம், மாதம், ஆண்டுசினைப் பெயர்- கை, கால், தலை, கண்பண்புப் பெயர்- நீளம், வெண்மை, நல்லவன், தீயவன்தொழிற்பெயர் – படித்தல், எழுதுதல், உண்ணல்
வினை:வினையானது முற்று மற்றும் எச்சம் என இரண்டு கொண்டுள்ளது.முற்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முற்று தெரிநிலை வினைமுற்று மற்றும் குறிப்பு வினைமுற்று என அழைக்கப்படுகின்றது.
பெயரெச்சம்:எச்சம் பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கப்படும்.
பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், வினைசயெச்சம் தெரிநிலை வினையெச்சம் என குறிப்புகள் இங்கு காணப்படுகின்றது.
ஒரு பொருளின் வினையை செயலை உணர்த்துவது வினைச் சொல் ஆகும்.
தன் பொருளில் முற்று பெற்று வந்துள்ள வினைச் சொற்கள் வினைமுற்று ஆகும்.
இது எழுவாய்க்கு பயனிலையாய் அமையும், மூன்று காலங்களில் ஒன்றை உணர்த்தும்.எ.கா: வந்தான், சென்றான், வருவான், சென்றேன்,வினைமுற்று திணை, எண், பால், இடம், ஆகியவற்றை காட்டும்வினைமுற்று 2 வகை
தெரிநிலை வினைமுற்று:
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள், என்னும் ஆறனையும் தெரிவித்து காலத்தை வெளிப்படையாக காட்டுவது
எ.கா: உழுதான்
செய்பவன் – உழவன்கருவி- கலப்பைநிலம் – வயல்செயல் – உழுதல்காலம்- இறந்தகாலம்செய்பொருள்- நெல்
குறிப்பு வினைமுற்று:
பொருள் முதல் ஆறினையும் அடிப்படையாகக் கொண்டு செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆரினுள் கருத்தா ஒன்றினை மட்டும் தெரிவித்து காலத்தைக் குறிப்பால் காட்டும் வினைமுற்று எ.கா:அவன் பொன்னன் – பொன்னை உடையவன்- பொருள்அவன் விழுப்புரத்தான்- விழுப்புரத்தில் வாழ்பவன்- இடம்அவன் சித்திரையான்- சித்திரையில் பிறந்தவன் – காலம்அவன் கண்ணன் – கண்களை உடையவன் – சினைஅவன் நல்லன் – நல்ல இயல்புகளை உடையவன் – குணம்அவன் உழவன் – உழவுத் தொழில் செய்பவன் – தொழில்
அவன் என்னும் எழுவாய்க்கு பயனிலையாய் வந்த பொன்னன் என்பதே குறிப்புவினை ஆகும். அதாவது பொன்னை உடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் என முக்காலத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது.
ஏவல் வினைமுற்று:
முன்னிலையிடத்தாரை ஏவுதற் பொருளில் வரும் வினைமுற்று, இது எதிர்காலத்தை காட்டும், ஒருமை, பன்மை, உணர்த்தும்.
செவ்வாய்- ஏவல் ஒருமை}செய்வாய்- ஏவல் பன்மை} வினைமுற்றுசென்மின்- ஏவல் பன்மை}
வியங்கோல் வினைமுற்று: க, இய், இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வரும்வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும். மூன்று இடங்களிலும் ஐம்பாலிலும் வரும்.
வாழ்க – வாழ்த்துதல்ஒழிக- வைதல் செல்க – விதித்தல் வாழிய, வாழியர்- வாழ்த்துதல்
உடன்பாடும், எதிர்மறையும்:
அனைத்து வினைமுற்றுகளும் உடன்பாட்டு பொருளிலும், எதிர்மறை பொருளிலும் வரும்.
தொழில் நிகழ்வதை காட்டுவது- உடன்பாடுதொழில் நிகழாமையைக் காட்டுவது- எதிர்மறை
தெரிநிலை வினைமுற்று- தொடுத்தான் – தொடுத்திலன் ஏவல் வினைமுற்று- செல்வீர் – செல்லாதீர்வியங்கோல் வினைமுற்று- சொல்லுக- சொல்லற்க