வாட்டி வதைக்க போகும் வெப்பம்:- வானிலை மையம் எச்சரிக்கை
சுறாவளி புயல் காரணமாக தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வங்கக்கடலில் 21 ஆம் தேதி புதிய புயல் ஒன்று உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது இது புயலாக மாற வாய்ப்புள்ளதால், புயலை எதிர்கொள்ள அரக்கோணத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு விரைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து கூறிய வானிலை ஆய்வாளர்கள், இந்த அரிய வகை சூறாவளி புயலாதமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த புயலைச் சுற்றி காற்று எதிர் கடிகார திசையில் நகரும் என்பதால், அது பிற்பகலில் வரக்கூடிய கிழக்கு திசை காற்றை காலதாமதப்படுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில், இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக உள் மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் கணித்துள்ளனர்.