செய்திகள்

54 மொபைல் ஆப்-களுக்கு தடை…இந்திய அரசு முடிவு..?

இந்திய-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், சீனாவிற்கு பாடம் புகுட்டும் வகையில் TikTok, Shareit, WeChat, Helo, Likee, UC News, Bigo Live, UC Browser, ES File Explorer, போன்ற பிரபலமான அப்ளிகேஷன்கள் உட்பட சுமார் 59 ஆப்ஸ் தொடங்கி சுமார் 224 சீன ஆப்களை கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு தடை செய்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மேலும் 54 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு தடை விதித்து இந்திய அரசு புதிய உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ANI வெளியிட்ட தகவலின் படி, Beauty Camera: Sweet Selfie HD, Beauty Camera – Selfie Camera, Equalizer & Bass Booster, CamCard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock, Dual Space Lite. உள்ளிட்ட 54 சீன செயலிகள் “இந்தியர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக” இருப்பதாக அரசு நம்புவதால் தடை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செயலிகளில் பெரும்பாலானவை டென்சென்ட், அலிபாபா மற்றும் கேமிங் நிறுவனமான நெட்ஈஸ் போன்ற முக்கிய சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இந்த அனைத்து சீன தொழில்நுட்ப நிறுவனங்களும் 2020 இல் அரசால் தடைசெய்யப்பட்ட அந்த செயலிகளை, வேறோரு பெயரில் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சீன செயலிகளை தடை செய்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeITY), இந்த செயலிகளை தடுக்க இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69a மூலம் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம்,
Google Playstore க்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *