மத்திய அரசு தியேட்டர்களை திறப்பது குறித்து திரையரங்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சு
கொரோனா பொது முடக்கத்தால் திரைத்துறை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. உரிய கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி முறையில் நடைபெற உள்ளன. முதலில் வடமாநில திரையரங்குகளின் பிரதிநிதிகளுக்கு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தென்னிந்திய திரை அரங்க பிரதிநிதிகளுக்கு மட்டுமே அழைப்பு எதுவும் வரவில்லை.
இதனால் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தென்னிந்திய பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டன. நாடெங்கும் உள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து இவற்றின் உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் திரையரங்குகள் எப்போது திறப்பது என்ற முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
திரையரங்கு மூடப்பட்டுள்ளதால் சூர்யாவின் சூரரைப்போற்று, ஆன்லைன் OTT யில் ரிலீஸ் ஆவதில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதே போல வரவிருக்கும் விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் OTTயில் ரிலீசாக கூடாது. அதை திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவதால் உற்சாகம் ஏற்படும்.
மேலும் ரசிகர்களுக்கு திரைப்படத்தை கொண்டாட ஏதுவாக இருக்கும் என்ற மனநிலையில் ரசிகர்கள் உள்ளனர். அதனால் திரையரங்குகளில் விரைவில் திறக்க வேண்டும் என்பதில் திரையரங்கு உரிமையாளர்களை விட ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.