மத்திய அரசு அனுமதி ஐபிஎல் குறித்து ஐபிஎல் தலைவர் கூறியதாவது
ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று விவோ நிறுவனத்திற்கு பதிலாக ஸ்பான்சர்ஷிப்பில் எந்த நிறுவனம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பிரிஜேஷ் கூறியுள்ளார். அடுத்த ஏழு நாட்கள் விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் தொடர் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. சார்ஜா அபுதாபி மற்றும் துபாயில் மூன்று நகரங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.
அனைத்து நாடுகளிலும் ஆகஸ்ட் 20ம் தேதிக்குப் பிறகு கிரிக்கெட் வீரர்கள் வருகை தர உள்ளனர். இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டன.
கொரோனா பொது முடக்கத்தால் இந்தியாவில் ஒத்தி வைக்கப் பட்டிருந்த ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் பிசிசிஐ விண்ணப்பித் திருந்தது. மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகிய இரண்டு அமைச்சகங்களும் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிட்ஜஸ் படேல் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி மத்திய அரசு அளித்ததாக ஐபிஎல் தலைவர் தெரிவித்தார்.