செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

என்னது… ஐந்தாவது படித்திருந்தால் அரசுப் பணியா!!!!!

தேனி மாவட்டத்தில் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு அரசுப் பணிக்கான ஒரு அரிய வாய்ப்பு…

வருவாய்த்துறை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் 2020-2021 மற்றும் 2021-2022ஆம் ஆண்டிற்கான கிராம உதியாளர் பணிக்கான வேலை வாய்ப்பை அறிவித்து உள்ளது. இந்த புதிய வேலை வாய்ப்புக்காக மொத்தம் 07 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

எனவே விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள நண்பர்கள் இந்த அறிய வேலை வாய்ப்பை கடைசி தேதியான 28.10.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அரசுப் பணியை தவறவிடாமல் சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

பணிகள் மற்றும் சம்பளம்

கிராம உதவியாளர் பணிக்காக மொத்தம் 07 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. சம்பளத்தை பொறுத்தவரை அவர்களின் தகுதிற்கு ஏற்ப மாத சம்பளமனது ரூபாய் 11,100/- லிருந்து ரூபாய் 35,100/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதியானது குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேனி மாவட்டம் அறிவித்துள்ள பொதுவான விபரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்படும் இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தொடர்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தேனி மாவட்டம் அறிவித்துள்ள கிராம உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் அல்லது எழுத்துத் தேர்வின் மூலமாக விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வில் வெற்றிபெற்ற நபர்கள் தேனி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி

வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி.

விண்ணப்பிப்பவர்கள் அஞ்சல் உறையின் மீது “கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு ஜூலை 2021 ” இங்கு தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளான ,28.10.2021ஆம் தேதிக்கு முன்னரே தங்களுடைய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

theni.nic.in

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று அதில் Recruitment for the post of Village Assistant in Andipatti Taluk என்பதற்குள் சென்று கவனமாகப் படித்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து அரசு வேலை பெற்று பயன் பெறுங்கள்…

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கி அனைத்து நண்பர்களுக்கும் சிலேட்டு குச்சி உதவும்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *