செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

Job opportunity: டிகிரி முடித்தால் போதும் 40,000 சம்பளத்தில் அரசு வேலை உங்களுக்காக ஒரு அறிய வாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியுடைய நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த அறிய வாய்ப்பை யாரும் தவறவிடாமல் பயன்படுத்தி பயன்பெறுங்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.23 ஆகும்.

காலிப்பணியிடங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலம் மூன்று அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். திட்ட மேலாளர் ( Project manager), தரவு உதவியாளர் ( Data assistant), ஆலோசகர் ( Consultant) ஆகிய பதவிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தெரிவித்த உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித் தகுதி

திட்ட மேலாளர்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கீழே கொடுக்கப்பட்ட படிப்பில் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (BAMS/BUMS/BHMS/BSMS/BNYS)

தரவு உதவியாளர் :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Computer Application/IT/Business Administration/B.tech (C>S) or (IT) /BCA/BBA/BSC-IT படிப்போடு கணிப்பொறி அறிவியலில் ஒரு வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் (Typing) ஒரு வருடம் கண்டிப்பாக முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஆலோசகர் :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BSMS பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பப்ளிக் ஹெல்த்தில் ஒரு வருடம் கண்டிப்பாக வேலை செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது மேற்குறிப்பிட்ட மூன்று பணிகளுக்கும் 1.9.2023 தேதியில் 35 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவரவர் பதவிகளுக்கு ஏற்ப 15,000 முதல் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பதவியின் நிலையை பொறுத்து உங்களது சம்பளம் முடிவு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் 3.10.23 முதல் வரவேற்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் நேரிலோ அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம்‌, ரேஸ்கோர்ஸ்‌ ரோடு, ஜமால்‌ முகம்மது கல்லூரி அருகில்‌, T.V.S. டோல்கேட்‌, திருச்சிராப்பள்ளி – 620 020. தொலைபேசி எண்‌. 0431-2333112 அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் 12.10.23 தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம். அதற்கு மேல் காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏறுக்கொள்ளபடமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு : அதிகாரபூர்வ வலைத்தளம் மற்றும் விண்ணப்ப படிவம்

Download : Application form

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *