செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

Job opportunity: 10 முதல் டிகிரி வரை அனைவருக்கும் அரசு வேலை அதுவும் பெண்களுக்கு முன்னுரிமை.. தவற விடாதீர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் 14 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு உள்ளூரை சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மேலும் இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி (10th Pass/Fail,) பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும், டிரைவர் வேலைகளுக்குமான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

காலிப் பணியிடங்கள்

மொத்தம் 14 இடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.மைய நிர்வாகிக்கு ஒரு (1) காலிப்பணியிடங்களும், மூத்த ஆலோசகருக்கு ஒரு (1) காலிப்பணியிடங்களும், தகவல் தொழில்நுட்ப பணியாளருக்கு ஒரு (1) காலி பணியிடங்களும் உள்ளது. ஆனால் களப்பணியாளர் வேலைக்கு ஆறு (6) காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, பல் நோய்க்கு உதவியாளர் உதவியாளர் பணிக்கு இரண்டு (2) காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதே சமயம் பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் வேலைக்காக மூன்று (3) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது (Total 14) என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்

பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 6,000 முதல் 30,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரவர்களின் பதவி நிலையை பொறுத்து அதற்கான சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சமாக 45 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

  • இதில் மைய நிர்வாகிக்கு (Master of Social Work (MSW)/ Bachelor’s Degree in law) படித்திருக்க வேண்டும்.
  • மூத்த ஆலோசகருக்கு தகவல் (Master of Social Work (MSW)/ Master Degree in Clinical Psychology) படித்திருக்க வேண்டும்.
  • தகவல்‌ தொழில்நுட்ப பணியாளருக்கு (Graduate with Diploma in Computer / IT) படித்திருக்க வேண்டும்.
  • பல் நோய்க்கு உதவியாளருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • அதேபோல் பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பின் வேதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ மாவட்ட சமூகநல அலுவலர்‌, அறை எண்‌.35,36 தரை தளம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, திருப்பூர்‌ என்ற முகவரிக்கு வரும்‌ 15.10.2023 மாலை 5.30 மணிக்குள்‌ தபால்‌ மூலமாகவோ அல்லது dswo.tpr@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ அனுப்பப்பட வேண்டும்‌.

குறிப்பு : தாமதமாக பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌ எனவும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.தா.கிறிஸ்துராஜ்‌, அவர்களால்‌ தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *