கல்விதேசியம்வேலைவாய்ப்புகள்

தமிழக வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை பணியிடங்கள்

தமிழ்நாட்டில் ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப சென்னை வருவாய் துறை வேலைவாய்ப்பு அமைப்பானது வேலை வாய்ப்பினை அறிவித்திருக்கின்றது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் இரண்டு ஆகும்.

வயது வரம்பு

வருவாய் துறை வேலைவாய்ப்பு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆஃப்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம். தமிழ்நாடு வேலைவாய்ப்பு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 32 வயது வரை விண்ணப்பிக்க சலுகைகள் அளிக்கப்பட்டு இருக்கின்றது மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்பிக்க 35 ஆண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளத் தொகை

தமிழக வருவாய்த் துறையில் பணி வாய்ப்பு பெறுவதற்கு ரூபாய் 19 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 62 ஆயிரம் வரை சம்பள தொகையினை பெறலாம்.

கல்வித்தகுதி

தமிழக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து கல்வி தகுதியானது எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் மேலும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமை பெற்றோருக்கு அவசியமாகும். தமிழக வருவாய்த் துறையில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது.

சான்றிதழ்

தமிழ்நாட்டில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் சுய கையெழுத்திட்டு சான்றிதழ் நகல்களுடன் வேடசந்தூர் வட்டம் அலுவலகத்திற்கு ஜனவரி 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பினை பெற https://cms.tn.gov.in/sites/default/files/announcement/CRA_Driver_recruitment2020.pdf இங்கே கிளிக் செய்யவும் கொடுக்கப்பட்டுள்ள விளம்பர அறிவிக்கையை முழுமையாக படித்து தேவைப்படும் ஆவணங்களை முறையாக இணைத்து விண்ணப்பிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *