கல்லூரிகளுக்கு நெறிமுறைகளை அறிவித்த தமிழக அரசு
டிசம்பர் 7ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் இறுதியாண்டு மாணவர்களுக்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளன.
- இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தற்போது கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது
- கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டன.
- பல்வேறு நெறிமுறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என்று தமிழக அரசு வெளியிட்டுள்ளன.
ஹோட்டல் மேனேஜ்மென்ட், பாலிடெக்னிக் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தற்போது கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு
ஒவ்வொரு கல்லூரி நிறுவனத்தின் முதல்வர் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது கண்காணித்து உறுதி செய்தல் வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ‘ஆரோக்ய சேது’ செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். முடிந்தவரை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்வேறு நெறிமுறைகளை அரசு வெளியிட்டன
கல்லூரியில் மாணவர் விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதி உள்ளன. 15 பக்கங்கள் அடங்கிய பல்வேறு நெறிமுறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என்று தமிழக அரசு வெளியிட்டுள்ளன.
நீச்சல் மூட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. உடனடியாக தனிமைப்படுத்துதல் அவசியம். வாரத்திற்கு ஆறு நாட்களும் கல்லூரி செயல்படும். மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.