தடை உத்தரவு நீடிப்பு
பொங்கல் திருநாளான வருகிற 15 முதல் 17 ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரவுவதற்கு அபாயம் உள்ளதால் பொங்கல் அன்று மட்டும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 நாட்களுக்கு இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளன.

வருகிற 15 முதல் 17-ம் தேதிகள் வரை அனைத்து பொது இடங்களிலும் மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், தேசிய பூங்கா கிண்டி போன்ற இடங்களுக்கு மக்கள் கூட்டம் சேர கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளன.