Government announcement: இந்த பொருளை மட்டும் காட்டினால் போதும் வெங்காயம் ரூ .25க்கு வாங்கலாம்..அரசின் அதிரடி ஆஃபர்
ஆதார் அட்டையை காட்டினால் வெங்காயம் வெறும் 25 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த ஆஃபர் ரொம்ப நல்லா இருக்கே.. பாமர மக்களுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை தங்கத்தின் விலை அளவிற்கு விற்கப்பட்டது. தக்காளி என்று சொன்னாலே பயந்து தெரித்து ஓடும் அளவிற்கு தக்காளியின் விலையானது உயர்ந்து விற்கப்பட்டது. திருமண மண்டபங்களில் மணமக்களுக்கு தக்காளியை பரிசளிப்பதை மிக காஸ்ட்லியான பரிசாக அப்பொழுது இருந்தது. அதனை வைத்து பலவிதமான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. தக்காளியை நினைத்து கூட பார்க்காத பாமர மக்களும் அப்போது இருந்தனர் இந்நிலையில் பாமர மக்களுக்கு உதவும் வகையில் அரசானது ரேஷன் கடைகளில் தக்காளியை 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்தது.
தக்காளியின் விலை உயர்வு தற்பொழுது குறைந்த விலையில் விற்கப்படும் நிலையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வெங்காயத்தின் விலை தற்பொழுது 100 ரூபாயை தாண்டி உள்ளது. எனவே பாமர மக்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் பஞ்சாப் அரசு தற்பொழுது ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது காய்கறி மண்டைக்கு ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு சென்றால் வெங்காயம் ரூபாய் 25 ரூபாய்க்கு தரப்படுகிறது. இத்திட்டத்தால் பஞ்சாப் மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர் இத்திட்டம் இன்னும் சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டம் அனைத்து இடத்திலும் அமல்படுத்தப்பட்டால் பாமர மக்கள் மிகவும் சந்தோஷமாக வெங்காயத்தை வாங்கி செல்வர் அவர்களின் அன்றாட தேவையை இத்திட்டம் பூர்த்தி செய்ததாக இருக்கும். எனவே அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.