ஏர்டெல் நிறுவனத்துடன் கைகோர்க்கும் கூகுள்…
இந்தியாவின் பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வெளியான தகவலில், உலகப்புகழ் பெற்ற கூகுள் நிறுவனம், இந்தியாவின் பாரதி ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத்தில், சுமார் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம், ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தொழில் நுட்ப புரட்சியில் ஏர்டெலின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பங்குகளாகவும், வர்த்தக உடன்பாடுகளாகவும் அந்த முதலீடு அமைந்திருக்கும். இருப்பினும், பங்குதாரர்களின் ஒப்புதலைப் பொறுத்தே முதலீடு அமையும் என கூறப்படுகிறது. கூகுளின் இந்த அறீவிப்பை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம், சுமார் 10 பில்லியன் டாலர் வரை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.