நவராத்திரி நாலு நல்லது பார்போம் வாங்க!
நவராத்திரி என்றவுடன் கொலுவும் சுண்டலும் தான் நம் நினைவுக்கு வருகிறது. அதோடு சிறுசிறு டப்பாக்களும் தட்டுகளும் குழந்தையாக இருந்தால் பள்ளிக்குத் தேவையான பென்சில் டப்பா போன்றவை பரிசாக அளிப்பார்கள். ஆஹா அது ஒரு இனிய காலம். கொரோனா வந்தாலும் வந்தது எல்லாத்துக்கும் ஒரு முடக்கத்தை போட்டிருச்சு.
- நவராத்திரி கொலு எப்படி வைக்க வேண்டும்.
- கீழ்ப் படியில் இருந்து மேற்படி வரை எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும்.
- கலச ஸ்தாபனம் செய்ய நல்ல நேரம்.
- எவ்வாறு பூஜை செய்யலாம்!
நவராத்திரியில் கொலு
நம் முன்னோர்கள் வழி கொலு வைக்கும் பழக்கத்தை அவரவர் பின்பற்ற வேண்டும். கொலு வைக்க பழக்கமில்லாதவர்கள் புதுசாக தொடங்கினால் வருடாந்திரம் தவறாமல் வைத்தல் வேண்டும். கலச ஸ்தாபனம் விளக்கு பூஜை அவரவர் பழக்கவழக்கத்தை சார்ந்தது. ஒற்றை படி அதாவது 3, 5, 7, 9 போன்ற ஒற்றை எண்களில் படிக்களுடன் பொம்மை அழகாக அடுக்கி வைத்தல் வேண்டும்.
கொலு படி
பிறப்பு இறப்பு வட்டத்திலிருந்து மோக்ஷத்தை அடையும் தாத்பரியத்தை கொண்டது இந்த கொலு படிகள். கீழ்ப்படியில் மிருகங்கள் பறவைகள் அதனைத் தொடர்ந்து மனிதர்கள் பின்பு சந்நியாசிகள் அதன் பிறகு தான் கடவுள் பொம்மைகளை அடுக்குதல் சாலச் சிறந்தது. மரப்பாச்சி பொம்மைகள் கொலுவின் தனிச்சிறப்பு. நம் ஆசைக்காக மலைக் கோவில் பூங்கா போன்ற ஏற்பாடுகள் செய்து அழகு செய்யலாம். பூ அலங்காரம் வண்ண வண்ணமாய் பல்புகளுடன் ஜொலிக்கும் கொலுப்படிகளை பார்த்தாலே பரவசம் அடையலாம்.
குறிப்பு
கொலு படிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை முன்பே தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும். கொலு படிகள் மரம் மற்றும் ஸ்டிலில் கிடைக்கிறது. அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் கொலு படிகளை முன்பே வாங்கி ஏற்பாடு செய்து வைக்கவும். பூ அலங்காரம் வண்ண வண்ண பல்புகள் போன்றவையும் கடைகளில் கிடைக்கிறது. அவரவர் வைக்கும் கொலு படிக்கு தகுந்தவாறு இதனையும் பெற்றுக் கொள்ளவும்.
மேலும் படிக்க : திருப்புகழ் 24 அம்பொத்த விழி (திருச்செந்தூர்)
கலசம்
கலசம் வைக்கும் வழக்கம் இருப்பவர்கள் அதனை பின்பற்றவும். பொம்மை மற்றும் கலசத்தை 16/10/2020 மதியம் 12:15 மணி முதல் 12:30 மணி வரை அபிஜித் முகூர்த்தத்திலோ அல்லது சுக்கிர ஓரையான 1:00 முதல் 1:30 மணி அளவிலோ அமைத்தல் சிறந்தது.
பூஜை
17-ஆம் தேதி ஆரம்பிக்கும் நவராத்திரியில் துர்கா லட்சுமி சரஸ்வதி பூஜைகள் செய்யவும். கலச ஸ்தாபனம் செய்பவர்கள் முறைப்படி அனைத்தும் செய்து அஷ்டோத்திரத்துடன் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். விளக்கு பூஜையும் செய்யலாம். வீட்டில் கொலு வழக்கம் இல்லாதவர்கள் பொதுவான பூஜை அறையில் நவராத்திரியில் பூஜை செய்வது நன்று.
ம்க்களே விரிவான விளக்கத்திற்கு அடுத்த கட்டுரையை படிக்கவும்.
மேலும் படிக்க : உங்களுக்கான நல்ல நேர சுபஓரை