சுதந்திர தின வாழ்த்துக்களுடன் குட் லக் சகி டீசர் ரிலீஸ்
கீர்த்தி சுரேஷ் நடித்த குட் லக் சகி டீசர் இன்று வெளியானது. சாரே ஜஹான்சே அச்சா என்று முடியும் இந்த டீசர் சுதந்திர தினத்திற்கு சரியான பரிசாக அமைநதுள்ளது என்பது தெரிகிறது. ராசியில்லாத ஒரு நாட்டுப் பெண் எப்படி தேசிய அளவில் துப்பாக்கி சுடுவதில் கில்லாடியாக மாறி கலக்குகிறார் என்கிற கதையை குட்லக் சரியாக இயக்குனர் நாகேஷ் இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் அசத்தலான நடிப்பு டீசரின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசரை மூன்று மொழி பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் டீசரை விஜய் சேதுபதியும், தெலுங்கு டீசரை பிரபாஸ், மலையாள டீசரை பிரித்விராஜ் வெளியிட்டுள்ளனர். தமிழ் வெர்ஷனில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டப்பிங் கலைஞர் ஒருவர் குரல் கொடுத்துள்ளதாகவும், தெலுங்கு மொழியில் கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ள நிலையில் தமிழ் ரசிகர்கள் இதனால் சற்றே அப்செட் ஆகி இந்த டீசருக்கு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மற்றபடி நிச்சயம் இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஹாலிவுட்டில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சாந்த் கி ஆங்க் படத்தில் வயதான துப்பாக்கி சுடும் இரட்டையர்கள் கதையில் நடிகை டாப்ஸி மற்றும் புமி பெட்நேகர் நடித்திருப்பார்கள்.

அதே போன்ற ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையின் கதையாக குட் லக் சகி உருவாகி இருக்கிறது. இதில் அவருக்கு கோச்சாக ஜெகபதிபாபு நடித்துள்ளார்.