பென்குயின் ஐ தொடர்ந்து வெளியானது குட் லக் சகி ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 15 டீஸர்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிசன்ட் ஆக பென்குயின் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து குட்லக் சசி என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஒரே நேரத்தில் நாகேஷ் குக்குனூர் இயக்க பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் வொர்த் ஏசாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் சார்பில் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச்சூடு வீராங்கனையாக நடித்துள்ளார். விளையாட்டு, காதல் மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளன. ஜெகபதி பாபு, ஆதி பினிசெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது என்பது ராக்ஸ்டார் தேவிஸ்ரீபிரசாத் படத்துக்கு இசையமைக்க சிறந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமிருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதாக இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டன. படத்தின் முக்கிய பகுதிகளைப் விகராபாத் மற்றும் புனேவில் எடுத்துள்ளார்கள். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
மிஸ் இந்தியா ரங் தே ரஜினிகாந்துடன், அண்ணாத்த மோகன்லாலுடன், மறைகாயர், அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்களை அடுத்தடுத்து வரிசையாக வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மூன்று மொழிகளில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.