கொரோனா பாதிப்பால் தங்கம் கிடுகிடுவென உயர்வு..!!
இன்றைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பால் தங்கம் கிடுகிடுவென உயர்ந்தது. சீனாவில் கொடூரமான கொரோனா தாக்குதல், உலகெங்கும் பல நாடுகளில் பரவி வருவதால், தங்கம் வரலாறு காணாத அளவில் அதன் விலை ஏற்றம் கண்டுள்ளது.
வரலாறு காணாத அளவில் அதன் விலை
நடப்பாண்டில் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ஜனவரி 9 இல் 29,880 விற்கப்பட்டது. அப்போது ஈராக் ஐரோப்பா போர் பதற்றம் அதிகரித்ததால், அடுத்து ஜனவரி 8 31,432 ரூபாயாக புதிய உச்சம் கண்டது.
தொடர்ந்து போர் பதற்றம் தணிந்தது. அதை அடுத்து தங்கத்தின் விலையும் தணிந்து, ஜனவரி 14 ல் 30,112 குறைந்தது. தொடர்ச்சியாக சீனாவில் பூரண பாதிப்பு அதிகரித்தன் காரணமாக, தங்கத்தின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. பிறகு கொரோனா பாதிப்பால் பிப்ரவரி 8 ல் 31,182 ஆகவும், பிப்ரவரி 15ல் 31,392 ஆகவும், பிப்ரவரி 19 ல் 31,720 ஆகவும் விற்பனையானது.
பொருளாதார வீழ்ச்சி
பிப்ரவரி 20ல் 31,840 ஆகவும், ஒரு சவரனுக்கு பிப்ரவரி 22ல் 32, 576 ஆகவும் விற்பனையானது. பிப்ரவரி 24ல் 33,328 ஆகவும் விற்பனையான தங்கம் விலை, அதிகப்படியான பாதிப்பால் இரண்டு நாட்களாக சற்று விலை குறைந்தது. தற்பொழுது மறுபடியும் பொருளாதார வீழ்ச்சியால் அதிகப்படியான விலையில் விற்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்கம் அணிவது ஒவ்வொரு விசேஷத்திற்கும் அணிவது பாரம்பரியமாக இருந்தது.
கல்யாணம் சீர்வரிசை, என்ற முறைகாகவே தங்கம் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் கொரோனா பாதிப்பு இருப்பதால், தேவையில்லாமல் தங்கத்தை வாங்க வேண்டாம், என்று ஒருசாரர் தெரிவிக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து மீண்ட பிறகு, தங்கம் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, பொருளாதார பங்குச்சந்தைகள் பங்குச்சந்தையில் பங்கீட்டு ஆளர்கள் முதலீடு செய்யாமல், திடீரென தங்கத்தில் முதலீடு செய்வதால் இதன் விலை உயரும் வாய்ப்பிருக்கிறது. இந்த பொருளாதார சிக்கலை தவித்து நார்மல் ஆனதும், இதன் விலை தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவிற்கு டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து வீழ்ச்சியை நோக்கி போவது இரண்டாவது காரணமாகும். என்று ஆபரணத்தங்கம் விற்பனையாளர்கள் கூறிவருகின்றனர்.
தங்கம் தேவை இல்லாதவர்கள் இப்பொழுது தங்கத்தை வாங்க வேண்டாமென்றும், முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். விலை குறைந்த பிறகு தங்கத்தில் முதலீடு செய்வதால், பிற்காலத்தில் நல்ல லாபகரமாக இருக்கும். விலை ஏறி இருக்கும் இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது பிற்காலத்தில் நஷ்டத்தை கொடுக்கும் என்று கூறுகின்றனர்.
விலை ஏறுகிறது என்று அவசரமாக கடைக்கு சென்று நகையை வாங்குவதில் அர்த்தமே இல்லை. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வாங்க வேண்டிய சூழலில் வாங்கி தான் ஆக வேண்டும். கட்டாயத் தேவை இல்லை என்றால் தங்கம் வாங்குவதை தள்ளிப் போடலாம் என்பது பல தரப்பினரின் கருத்தாக உள்ளது.